Published:Updated:

பேரறிவாளன்: `சிறிய விசாரணைதான்' என்று அழைத்துச் சென்றனர்... 31 வருடப் போராட்டம்!

பேரறிவாளன்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 1991-ம் ஆண்டு, ஜூன் மாதம் 11-ம் தேதி பேரறிவாளன் என்கிற அறிவு கைதுசெய்யப்பட்டபோது அவருக்கு வயது 19.

பேரறிவாளன்: `சிறிய விசாரணைதான்' என்று அழைத்துச் சென்றனர்... 31 வருடப் போராட்டம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 1991-ம் ஆண்டு, ஜூன் மாதம் 11-ம் தேதி பேரறிவாளன் என்கிற அறிவு கைதுசெய்யப்பட்டபோது அவருக்கு வயது 19.

Published:Updated:
பேரறிவாளன்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனைக் கைதியாக சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் கழித்துவருகிறார் முருகன். இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். வீட்டில் வைத்த பெயர், ஸ்ரீகரன். ஓர் அண்ணன், ஓர் அக்கா, மூன்று தம்பிகள், மூன்று தங்கைகள் என முருகனுடன் சேர்த்து அவரின் பெற்றோருக்கு மொத்தம் ஒன்பது பிள்ளைகள். 1987-ல் முருகனின் அண்ணன் புலிகள் அமைப்பில் சேர்ந்து, சண்டையில் கொல்லப்பட்டார்.

அதன் பின்னர் முருகனும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்ததாக ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ., தனது குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தது. ஆனால், "குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக வெளிநாடு செல்லும் நோக்கத்துடனேயே முருகன் சென்னை வந்தார்" என, இவ்வழக்கில் முருகனுடன் சேர்ந்து கொலைச் சதியில் ஈடுபட்டதாக தண்டனை விதிக்கப்பட்ட அவரின் மனைவி நளினி, தான் எழுதிய புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

நளினி, ``ஈழ விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தின் பல ஊர்களில் தங்கியிருந்தார்கள். அப்படிப் போராளிகளுக்கு ஆதரவாக நின்ற இளைஞர் பட்டாளத்தில் என் தம்பி பாக்கியநாதனும் ஒருவன். சென்னையில் பிரபலமாக இருந்த சுபா சுந்தரம் போட்டோ ஸ்டூடியோவுக்கு பாக்கியநாதன் போய்வருவான். அங்குதான் பேரறிவாளன், ஹரிபாபு, முத்துராஜ் உள்ளிட்ட பலரும் புகைப்படக்கலைப் பயிற்சி கற்றுக்கொண்டிருந்தார்கள். அப்படியான நண்பர்கள் பட்டியலில் புதிதாக வந்து சேர்ந்தவர்தான் தாஸ் என்ற முருகன்.

பேரறிவாளன்: `சிறிய விசாரணைதான்' என்று அழைத்துச் சென்றனர்... 31 வருடப் போராட்டம்!

வெளிநாடு சென்று வேலை பார்ப்பதற்காக அவரை அவருடைய அப்பா, ஓர் ஏஜென்ஸியைப் பிடித்து படகு மூலம் தமிழகத்தின் வேதாரண்யத்துக்கு அனுப்பிவைத்துவிட்டார். அப்படி வேதாரண்யம் வந்த இடத்தில்தான் ஒற்றைக்கண் சிவராசன் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பிவைக்கும் ஏஜென்ட்டாக அறிமுகமாகியிருக்கிறார்” என்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குயில்தாசன் - அற்புதம் அம்மாள்
குயில்தாசன் - அற்புதம் அம்மாள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 1991-ம் ஆண்டு, ஜூன் மாதம் 11-ம் தேதி பேரறிவாளன் என்கிற அறிவு கைதுசெய்யப்பட்டபோது அவருக்கு வயது 19. 1971-ம் ஆண்டு, ஜூலை 30-ல் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் பிறந்தவர். தாய் அற்புதம்மாள், தந்தை குயில்தாசன் கவிஞர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முக்கியக் குற்றவாளியான சிவராசனுக்கு, மனித வெடிகுண்டை வெடிக்கச் செய்வதற்காக 9 வோல்டேஜ்கொண்ட இரண்டு பேட்டரி செல் வாங்கிக் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் பேரறிவாளன் கைதுசெய்யப்பட்டார். அப்போது எலெக்ட்ரானிக்ஸ் டிப்ளோமா படிப்பு முடித்து, உயர் கல்வியைத் தொடர சென்னையில் உள்ள திராவிடர் கழக தலைமையகமான பெரியார் திடலில் தங்கியிருந்தார். ஒரு சிறிய விசாரணை என்று கூறித்தான் சி.பி.ஐ., அவரை அழைத்துச் சென்றது.

பேரறிவாளன்: `சிறிய விசாரணைதான்' என்று அழைத்துச் சென்றனர்... 31 வருடப் போராட்டம்!

இந்த வழக்கின் புலன் விசாரணையின்போது 1991-ம் ஆண்டு, மே 7-ம் தேதியன்று, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவரான பொட்டுஅம்மானுக்கு சிவராசன் அனுப்பிய ரேடியோ தகவல் ஒன்று சிக்கியது. அதைப் பகுப்பாய்வு செய்ததில், "நமது திட்டம் நம் மூவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது" என சிவராசன் அதில் கூறியிருந்ததாகத் தெரியவந்தது.

இவ்வழக்கு விசாரணையின்போது, தாம் அப்பாவி என்றும், ராஜீவ் கொலைச் சதி குறித்து தமக்கு முன்கூட்டியே எதுவும் தெரியாது என்றும் பேரறிவாளன் வாக்குமூலம் அளித்திருந்தார்.

ஆனாலும், இவ்வழக்கில் இவருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. 2011, செப்டம்பர் 9-ல் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில், அது தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் 2014, பிப்ரவரி 18 அன்று பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை ரத்துசெய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த நிலையில், பேரறிவாளன் வாக்குமூலம் உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையில், இவ்வழக்கின் விசாரணை அதிகாரிகளில் ஒருவரான முன்னாள் சி.பி.ஐ அதிகாரி தியாகராஜன், `உயிர்வலி’ எனும் ஆவணப்படத்துக்குத் தந்த பேட்டியில், பேரறிவாளனுக்குச் சாதகமாக அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பதற்கான வாக்குமூல வார்த்தைகளை மறைத்ததையும், மொழிபெயர்ப்பில் நடந்த குழப்பங்கள், வாக்குமூலத் தகவலைத் தவறாகப் பதிந்ததையும், தான் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் 2013-ம் ஆண்டு தெரிவித்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதற்கு பின்னரும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், தொடர்ந்து மேற்கொண்டுவந்த போராட்டங்கள் பலனளிக்காமலேயே இருந்துவந்தன. பேரறிவாளன் விடுதலைக்கு ஏறக்குறைய அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும், தமிழ் ஆர்வலர்களும் ஆதரவு தெரிவித்துவந்தனர். 2014-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் ஏழு பேரையும் விடுவிக்க முடிவுசெய்து, மத்திய அரசிடம் கருத்து கேட்டார். அப்போதிருந்த மன்மோகன் சிங் அரசாங்கம் உடனடியாக உச்ச நீதிமன்றம் சென்று தடை வாங்கியது. கடந்த 2016-ம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து மகனை விடுவிக்கக் கோரிக்கை விடுத்தார். ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு, 2018-ம் ஆண்டில் அரசமைப்புச் சட்டத்தின் இறையாண்மை அதிகாரத்தில் விடுதலை செய்ய முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு.

பேரறிவாளன்
பேரறிவாளன்

2016-ம் ஆண்டில் ஐந்து பேர்கொண்ட அமர்வு விசாரணை செய்து 'மத்திய அரசின் ஒப்புதல் வேண்டும்' எனத் தீர்ப்பளித்தது. மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்தது. அதேவேளையில், மாநில அரசுக்கு அதிகாரம் இல்லாமல் இல்லை, அரசமைப்புச் சட்டத்தின் இறையாண்மை அதிகாரம் ஆர்டிகிள் 161-ன் கீழ் விடுதலை செய்தால் மத்திய அரசிடம் ஒப்புதல் வாங்கவேண்டிய அவசியமில்லை என வழிகாட்டியது. பேரறிவாளனை விடுவிக்க உச்ச நீதிமன்றம் ஆட்சேபம் தெரிவிக்காத நிலையில், அவரது விடுதலை குறித்த கோப்பு தமிழக அரசு, தமிழக ஆளுநர், ஜனாதிபதி, மத்திய அரசு என மாறி மாறிச் சென்றதே தவிர, முடிவெடுக்கப்படாமலேயே இருந்துவந்தது.

கடந்த ஆண்டுகளில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக பரோலில் வந்திருந்தார் பேரறிவாளன். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், அவருக்கு பரோல்கள் வழங்கப்பட்டன. இந்த நிலையில், ஒருவழியாக சுமார் 31 ஆண்டுக்கால சிறை வாழ்க்கையிலிருந்து தற்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு காரணமாக ஜாமீனில் வெளி வந்துள்ளார் பேரறிவாளன்.

மகன் பேரறிவாளனுடன் அற்புதம்மாள்
மகன் பேரறிவாளனுடன் அற்புதம்மாள்

சிறையிலிருந்தபடி பி.சி.ஏ., எம்.சி.ஏ முடித்தார். ஐந்துக்கும் மேற்பட்ட சான்றிதழ் படிப்புகளையும் முடித்துள்ளார். மேலும், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் Desktop Publishing டிப்ளோமா படிப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சிபெற்று தங்கப் பதக்கம் வென்றார். தான் எழுதிய, 'தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்' என்ற நூலில், தான் நிரபராதி என்பதற்கான ஆதாரங்களை உணர்ச்சிகளின் அடிப்படையில் அல்லாமல், உண்மைகள் மற்றும் தர்க்கங்களின் அடிப்படையில் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism