Published:Updated:

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெற்றோர்! - 6 மாதக் குழந்தையைப் பராமரிக்கும் பெண் டாக்டர்

குழந்தை உன்னியுடன் டாக்டர் மேரி அனிதா
குழந்தை உன்னியுடன் டாக்டர் மேரி அனிதா

பெற்றோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகிவிட்டார்கள். 6 மாத குழந்தை தாயின் பராமரிப்பில் இருந்தால் அதற்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவிடும் ஆபத்து இருந்தது. அதனால் குழந்தையைத் தாயிடமிருந்து பிரிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை.

உலகை அச்சுறுத்தும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் தீவிர முயற்சி மேற்கொண்டுவருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சமூகத்தில் பல்வேறு சுவாரஸ்யங்கள் நிகழ்கின்றன. எதிர்பாராத உதவிகள் முகம் தெரியாத நபர்களிடமிருந்து கிடைக்கத்தான் செய்கின்றன. அத்தகைய ஒரு சம்பவம் பற்றிப் பார்க்கலாம்...

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கேரள மாநிலம் கொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி ஹரியானா மாநிலத்தில் தங்கியிருந்தனர். அங்குள்ள நிறுவனத்தில் பணியாற்றிவந்த குடும்பத் தலைவருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தன் மனைவியையும் 6 மாத கைக்குழந்தையையும் சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தார்.

`நீங்கள் செய்த உதவி மகத்தானது, ஷேரன் வர்கீஸ்!' -ஆடம் கில்கிறிஸ்ட் கொண்டாடிய கேரள செவிலியர் #corona

கேரளாவுக்கு வந்து சேர்ந்த தாய் மற்றும் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிர்ச்சி அளிக்கும் வகையில் தாய்க்கு மட்டும் கொரோனா பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் அவர் கலமசேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

கொரோனா எதிர்ப்பில் கேரளா செய்ததும், தமிழகம் செய்ய வேண்டியதும்... விரிவான அலசல்!

நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளாகாத குழந்தையை கொரோனா வார்டில் தாயுடன் வைத்திருந்தால் அந்தக் குழந்தையும் தொற்று பாதிப்புக்கு உள்ளாகலாம் என்பதால், குழந்தையை தாயிடம் இருந்து பிரிக்க மருத்துவர்கள் முடிவுசெய்தார்கள்.

குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், குழந்தையைப் பராமரிக்க உறவினர்கள் ஒருவரும் முன்வரவில்லை. அதனால் மருத்துவர்கள் என்ன செய்வதெனத் தெரியாமல் தவித்து நின்றார்கள்.

டாக்டர் மேரி அனிதா
டாக்டர் மேரி அனிதா

இதுபற்றி டாக்டர் மேரி அனிதா கூறுகையில், ``ஆம்புலன்ஸில் இருந்து கவச உடையுடன் இறங்கியவர்கள் பத்திரமாக குழந்தை உன்னியை என்னிடம் ஒப்படைத்தார்கள். உடனே நான் அபார்ட்மென்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன். உன்னி என்னிடம் வந்ததும் அழுதுகொண்டே இருந்தான்.

பச்சிளம் குழந்தையுடன் டாக்டர் மேரி அனிதா
பச்சிளம் குழந்தையுடன் டாக்டர் மேரி அனிதா

தாய்ப்பாலுக்கு ஏங்கி அழுத உன்னியை நான் கவனமாகத் தேற்றினேன். இப்போது அவன் என்னோடு பழகிவிட்டான். நீல நிறத்தில் விரிந்து கிடக்கும் வானத்தைப் பார்ப்பதில் அவனுக்கு ஆர்வம் அதிகம். பரந்த பூமியும் வானமும் ஏராளமான ரகசியங்களை வைத்துக்கொண்டிருக்கத்தானே செய்கின்றன” என்று சிரிக்கிறார், டாக்டர் மேரி அனிதா. அந்தச் சூழலில், மனநல பாதிப்பு மற்றும் ஆட்டிசம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளான குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு மருத்துவம் மற்றும் ஆலோசனைகளை வழங்கும் சமூக சேவை செய்துவரும் டாக்டர் மேரி அனிதா வசம் குழந்தையை ஒப்படைக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவெடுத்தது.

டாக்டர் மேரி அனிதாவுக்கு மூன்று குழந்தைகள். தாய் தனிமைப்படுத்திக் கொண்டதால், இரு மகன்களும் மகளும் அன்புக்காக ஏங்கித் தவிக்கிறார்கள். அதனால் மேரி அனிதாவுக்கும் உன்னிக்கும் தேவையான உணவை அவர்களே எடுத்துச் சென்று கொடுக்கிறார்கள்.

கணவர் மற்றும் குழந்தைகளுடன் டாக்டர். மேரி அனிதா
கணவர் மற்றும் குழந்தைகளுடன் டாக்டர். மேரி அனிதா

தாய்க்கு உணவு அளிக்கும்போது ஜன்னல் வழியாகத் தெரியும் தாயின் முகத்தைக் கண்டு மூவரும் மகிழ்ச்சி கொள்கிறார்கள். மூவரில் இளையவளான மவுஸ்மி, தாயைப் பிரிந்து இருப்பதில் வருத்தம் கொண்டிருக்கிறார். ஆனாலும் `சரி, குழந்தை உன்னிக்கு என்னை விடவும் அம்மாவின் அன்பு அவசியம்’ என்று தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டு வீடு திரும்புகிறார்.

அடுத்த கட்டுரைக்கு