Published:Updated:

`நான் ஒரு இந்தியக் குடிமகள்!' நீண்டநாள் போராட்டத்திற்குப் பிறகு நிரூபித்த 83 வயது மூதாட்டி!

அகோல் ராணி நமசுத்ரா

நீண்ட நாள் போராட்டத்திற்குப் பிறகு உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து தான் ஒரு இந்தியக் குடிமகள் என்பதை நிரூபித்துள்ளார் 83 வயதான மூதாட்டி அகோல் ராணி நமசுத்ரா.

`நான் ஒரு இந்தியக் குடிமகள்!' நீண்டநாள் போராட்டத்திற்குப் பிறகு நிரூபித்த 83 வயது மூதாட்டி!

நீண்ட நாள் போராட்டத்திற்குப் பிறகு உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து தான் ஒரு இந்தியக் குடிமகள் என்பதை நிரூபித்துள்ளார் 83 வயதான மூதாட்டி அகோல் ராணி நமசுத்ரா.

Published:Updated:
அகோல் ராணி நமசுத்ரா

1956-ம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானிலிருந்து (வங்காளதேசம்) அஸ்ஸாம் பகுதிக்கு பல குடும்பங்கள் குடிபெயர்ந்தனர். இவ்வாறு குடிபெயர்ந்த குடும்பங்களுக்கு இந்திய அரசாங்கம் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள கச்சார் மாவட்டத்தின் கட்டிகோரா என்னும் பகுதியில் அவர்களுக்கென்று நிலத்தை ஒதுக்கிக்கொடுத்து அவர்களை குடியமர்த்தியது. இதையடுத்து சமீபத்திய ஆண்டுகளாக அவர்களின் சந்ததியினர் பலருக்கு வாக்காளர் உரிமை மறுக்கப்பட்டு வருவதாகவும் அவர்களில் பலர் NRC-ன் இறுதிவரைவில் தங்கள் பெயரைப் பதிவு செய்யத் தவறிவிட்டனர் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சட்டவிரோதமாகக் குடிபெயர்ந்தவர்களை அடையாளம் காண 'வெளிநாட்டினர் தீர்ப்பாயம் (Foreigners Tribunal) அமைத்து விசாரித்து வருகிறது அசாம் அரசு.

அகோல் ராணி நமசுத்ரா
அகோல் ராணி நமசுத்ரா

அந்த வகையில் கடந்த 2012-ல் அகோல் ராணி நமசுத்ரா என்ற மூதாட்டியின் மகன் அர்ஜுன் நமசுத்ராவின்(40) இந்தியக் குடியுரிமையை கேள்விக்குள்ளாக்கி அவர் இந்தியக் குடிமகன் என நிரூபிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியது வெளிநாட்டினர் தீர்ப்பாயம். இந்த நோட்டீஸைப் பெற்ற அர்ஜுன் நமசுத்ரா தன் குடும்பத்தைப் பிரிந்து, தான் நாடு கடத்தப்படலாம் என்னும் அச்சத்தில் 2012-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பேசுபொருளானது. இதையடுத்து 83 வயதாகும் அவரின் தாய் அகோல் ராணி நமசுத்ராவுக்கும் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில் நீண்ட நாள் போராட்டத்திற்குப் பிறகு உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து தான் ஒரு இந்தியக் குடிமகள் என்பதை நிரூபித்துள்ளார் அகோல் ராணி நமசுத்ரா. அதுமட்டுமில்லாமல் தற்கொலை செய்துகொண்ட தன் மகனும் இந்தியக் குடிமகன்தான் என்பதை நிரூபித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism