Published:Updated:

பயங்கரவாதிகளுடனான மோதல்; இந்திய வீரர்களுக்கு உதவிய ராணுவ நாய் குண்டடிபட்டு மருத்துவமனையில்!

ராணுவ நாய் ஜூம்

பயங்கரவாதிகளுடனான மோதலில் குண்டடிபட்டு காயமடைந்த ராணுவ நாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பயங்கரவாதிகளுடனான மோதல்; இந்திய வீரர்களுக்கு உதவிய ராணுவ நாய் குண்டடிபட்டு மருத்துவமனையில்!

பயங்கரவாதிகளுடனான மோதலில் குண்டடிபட்டு காயமடைந்த ராணுவ நாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Published:Updated:
ராணுவ நாய் ஜூம்

ஜம்மு -காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்தில் நேற்றைய தினம், பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் இடையே நடந்த பயங்கர மோதலில் ராணுவ நாய் ஒன்றுக்குப் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் டாங்பாவா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். நேற்றைய தினம் பயங்கரவாதிகள் ஒரு வீட்டில் மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்தனர். அவர்களுடன் `ஜூம்' என்றழைக்கப்படும் பயிற்சியளிக்கப்பட்ட ராணுவ நாயும் சென்றிருக்கிறது. இந்த நிலையில், பயங்கரவாதிகளுக்கிடையேயான தாக்குதலில் ராணுவ நாய் ஜூம் குண்டடிபட்டுக் காயமடைந்திருக்கிறது.

ராணுவ நாய்
ராணுவ நாய்

இந்தச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய ராணுவ உயரதிகாரிகள், ``நேற்றைய தினம் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டிற்குள் ஜூமை அனுப்பினோம். ஜூம் பயங்கரவாதிகளைக் கண்டுபிடித்து வீழ்த்துவதற்குச் சிறந்த பயிற்சியளிக்கப்பட்ட ராணுவ நாய். தெற்கு காஷ்மீரில் ராணுவ அதிகாரிகள் மேற்கொள்ளும் பல மிஷன்களில் ஜூமின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகவே இருக்கிறது. நேற்று வழக்கம் போல் பயங்கரவாதிகள் மறைந்திருந்த வீட்டிற்குள் ஜூமை அனுப்பினோம்.

அப்போது அங்கு நடந்த மோதலில், பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு குண்டுகள் ஜூம் மீது பாய்ந்தன. இருப்பினும், ஜூம் இரண்டு பயங்கரவாதிகளைக் கண்டுபிடிக்க உதவியது. அதோடு மோதலில் ஜூம் பயங்கரவாதிகளைத் தாக்கி பாதுகாப்புப்படையினருக்கு உதவியது. இந்த மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரமான காயத்திலும் ஜூம் துணிச்சலாகப் போராடி பயங்கரவாதிகளை நிலைகுலைய வைத்தது" என்று கூறினர்.

இந்த நிலையில், பயங்கரவாதிகளின் தாக்குதலில் காயமடைந்த ஜூம் நாய் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.