Published:Updated:

கடுமையான வெயிலின் தாக்கம்: மகாராஷ்டிராவில் 25 பேர் பலி!

வெயில்

மகாராஷ்டிராவில் வெயிலின் தாக்கத்தால் 25 பேர் உயிரிழந்தனர்.

கடுமையான வெயிலின் தாக்கம்: மகாராஷ்டிராவில் 25 பேர் பலி!

மகாராஷ்டிராவில் வெயிலின் தாக்கத்தால் 25 பேர் உயிரிழந்தனர்.

Published:Updated:
வெயில்

நாட்டில் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதுவும் மகாராஷ்டிராவில் வெயிலின் தாக்கம் மிகவும் உக்கிரமாக இருக்கிறது. மகாராஷ்டிராவின் வடக்கு, மத்தியப் பகுதி, மராத்வாடா, விதர்பாவில் வெப்பநிலை 40 முதல் 46 டிகிரி வரை பகலில் தொடர்ந்துகொண்டிருக்கிறது. மாநிலத்தில் வெயிலுக்குச் சுருண்டு விழுந்து, வெப்ப பக்கவாதம் போன்றவற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. விதர்பாவில் அதிகபட்சமாக 15 பேர் வெயிலுக்கு உயிரிழந்திருக்கின்றனர். இதில் நாக்பூரில் மட்டும் 11 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

கோடை வெயில்
கோடை வெயில்

இது தவிர மராத்வாடாவில் ஆறு பேரும், ஜல்னாவில் நான்கு பேரும் வெயிலின் கொடுமை தாங்காமல் உயிரிழந்திருக்கின்றனர். கடந்த ஆறு ஆண்டுகளில் வெயிலுக்கு இந்த அளவுக்கு மகாராஷ்டிராவில் உயிரிழந்திருப்பது இதுவே முதன்முறை. விதர்பா மற்றும் ராஜஸ்தானில் கடந்த சில நாள்களாக அனல் காற்று வீசிக்கொண்டிருக்கிறது. டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த மூன்று நாள்களுக்கு வெயில் காற்று வீசும் என்றும், புழுதியுடன்கூடிய காற்று மற்றும் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சித்திரிப்பு படம்
சித்திரிப்பு படம்

ஒடிசாவில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பள்ளி நேரம் காலை 6 மணியிலிருந்து 9 மணி வரை என மாற்றப்பட்டிருக்கிறது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை வெயிலின் தாக்கம் சற்றுக் குறைவாகவே இருந்தது. டெல்லியில் நேற்று 40 டிகிரி என்ற அளவில் வெயில் பதிவாகியிருந்தது. அதேசமயம் கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு மின்தேவை அதிகரித்திருக்கிறது. இதனால் நிலைமையைச் சமாளிக்க மத்திய அரசு, மாநில மின்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism