Published:Updated:

ATM-மில் பணம் எடுத்தவர்களுக்கு வந்த 200 ரூபாய் கள்ளநோட்டு; வைரலாகும் வீடியோ!

உத்தரப்பிரதேச மாநிலம், அமேதியில் உள்ள ATM இயந்திரத்தில் போலி 200 ரூபாய் நோட்டுகள் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ATM-மில் பணம் எடுத்தவர்களுக்கு வந்த 200 ரூபாய் கள்ளநோட்டு; வைரலாகும் வீடியோ!

உத்தரப்பிரதேச மாநிலம், அமேதியில் உள்ள ATM இயந்திரத்தில் போலி 200 ரூபாய் நோட்டுகள் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி பகுதியைச் சேர்ந்த ஒருவர், முன்ஷிகஞ்ச் சாலை சப்ஜி மண்டி பகுதியில் உள்ள ATM-க்குச் சென்று தனது கார்டை உள்ளிட்டு பணத்தை எடுத்திருக்கிறார். அந்தப் பணம் முழுவதும் 200 ரூபாய் நோட்டுகளாக இயந்திரத்திலிருந்து வந்திருக்கிறது. அந்த ரூபாய் நோட்டுகளை அவர் தொடும்பொழுது வித்தியாசமாக இருந்திருக்கிறது. அவர் உற்று நோக்கியபோது அந்த ரூபாய் நோட்டில் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா என்று இருக்க வேண்டிய இடத்தில் சில்ரன் பேங்க் ஆஃப் இந்தியா (Children Bank of India) என்று இருந்திருக்கிறது. மேலும் அதில் (Full of Fun) எனவும் எழுதப்பட்டு இருந்திருக்கிறது. அதாவது குழந்தைகள் விளையாடும் போர்டு கேமான 'பிசினஸ்' விளையாட்டில் பயன்படுத்தப்படும் போலியான பணம் அது என்று தெரிகிறது.

இந்த நபருக்கு மட்டுமன்றி அந்த ATM-மில் பணம் எடுத்த சிலருக்கும் இதே மாதிரியான போலி நோட்டுகள் வந்துள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள், காவல்துறைக்கு இதுகுறித்துத் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் போலி 200 ரூபாய் நோட்டுகளை ஒருவர் கையில் பிடித்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. இச்சம்பவம் உத்தரப்பிரதேச மக்களுக்கிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.