Published:Updated:

மும்பை விமான நிலையத்துக்குள் எறியப்பட்ட பெட்ரோல் நிரப்பிய பாட்டில்; தீவிரவாதிகள் சதியா என விசாரணை!

மும்பை விமான நிலையம் (கோப்புக் காட்சி)
மும்பை விமான நிலையம் (கோப்புக் காட்சி)

மும்பை விமான நிலையத்துக்குள் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை எறிந்து தாக்குதல் நடத்திய மர்ம நபரை போலீஸார் தேடிவருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாட்டில் புதுடெல்லிக்கு அடுத்த மிகப்பெரிய விமான நிலையமாக இருப்பது மும்பை விமான நிலையம். மும்பை விமான நிலையம் எப்போதும் மிகவும் பிஸியாகவே இருக்கும். விமான நிலையத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான குடிசைகள் இருக்கின்றன. இந்தக் குடிசைகளிடமிருந்து விமான நிலையத்தை பிரிக்க, தடுப்புச் சுவர் கட்டப்பட்டிருக்கிறது. அடிக்கடி இந்த குடிசைப்பகுதியிலிருந்து விமான நிலையத்துக்குள் நாய்கள் வந்துவிடுவதுண்டு.

மும்பை விமான நிலையம் (கோப்புக் காட்சி)
மும்பை விமான நிலையம் (கோப்புக் காட்சி)
மும்பை விமான நிலையத்தில் நிறுவப்பட்ட அதானியின் பெயர்ப் பலகை; அப்புறப்படுத்திய சிவசேனாவினர்!

இதனால் தடுப்புச் சுவரைச் சுற்றி பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மும்பை விமான நிலையத்தின் ஓடுதளம் இருக்கும் பகுதிக்குள் மர்மப் பொருள் ஒன்று குடிசைப் பகுதியிலிருந்து பறந்து வந்து விழுந்தது. இதை கவனித்த பாதுகாப்பு படை வீரர் ஒருவர், இது குறித்து விமான நிலையத்தின் மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்குத் தகவல் கொடுத்தார். வெடிகுண்டு நிபுணர்களுடன் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து அதைச் சோதித்தபோது பாட்டில் ஒன்றில் பெட்ரோல் நிரப்பப்பட்டு விமான நிலையத்துக்குள் வீசப்பட்டிருந்தது தெரிந்தது. நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஏதாவது ஒரு விமானத்தின் மீது இந்த பாட்டில் விழுந்திருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும். இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் உடனே விமான நிலையத்தையொட்டி இருக்கும் குடிசைகளில் இது குறித்து விசாரித்தனர். ஆனால் அதை யார் எறிந்தது என்பது குறித்த விபரம் கிடைக்கவில்லை. தீவிரவாதிகள் யாராவது இந்தக் காரியத்தில் ஈடுபட்டனரா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். மும்பை விமான நிலையத்தின் பராமரிப்பு நிர்வாகம் சமீபத்தில்தான் குஜராத்தை தலைமையிடமாகக் கொண்ட அதானி குழுமத்தின் வசம் சென்றது.

மும்பை விமான நிலையத்தை ஒட்டியிருக்கும் குடிசைகளை அகற்றிவிட்டு அதில் வசிப்பவர்களுக்கு வேறு இடத்தில் வீடு கொடுக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் கொடுக்கப்படும் வீடு அருகிலேயே இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அருகில் வீடு கொடுக்க முடியாது என்று அரசு அறிவித்துள்ளது. எனவே குடிசைகள் கணக்கெடுப்பு பணியைக்கூட குடிசைவாசிகள் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர். இதற்கு உள்ளூர் அரசியல்வாதிகளின் ஆதரவு இருப்பதால் மும்பை விமான நிலைய நிர்வாகத்தால் எதுவும் செய்ய முடியாத நிலை இருக்கிறது. மாநில அரசும் இதில் அவசரப்பட்டு முடிவெடுக்க மறுத்துவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு