Published:Updated:

India-China Standoff:`அத்துமீறினால் உரிய பதிலடி!' - சீனாவுக்கு வார்னிங் கொடுத்த இந்தியா

சீன எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள்
சீன எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் ( Twitter/@adgpi )

எல்லையில் சீனா அத்துமீறினால் தற்காப்புக்காக ஆயுதங்களைப் பயன்படுத்தித் தாக்க, பாதுகாப்புத்துறை அமைச்சகம் கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறது.

கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய - சீன ராணுவ வீரர்களுக்கிடையே கடந்த ஜூன் 15-ல் மோதல் ஏற்பட்டது. இதில், ஆயுதங்களுடன் இருதரப்பும் மோதிக்கொண்ட நிலையில், இந்தியா தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. சீனா தரப்பில் இறப்பு குறித்து அதிகாரபூர்வத் தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனால், 40 முதல் 45 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியானது. அதேபோல், கிழக்கு லடாக்கின் பாங்கோங் சோ ஏரிப் பகுதியில் சீனா, கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி இரவு நேரத்தில் அத்துமீற முயன்றதை இந்திய வீரர்கள் வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தினர். இந்திய ராணுவத் தளபதி எம்.எம்.நரவானேவும் எல்லையில் ஆய்வு மேற்கொண்டு தனிப்பட்ட முறையில் ராணுவ அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

லடாக் எல்லை
லடாக் எல்லை
AP

இந்தச் சம்பவம் எல்லையில் பதற்றத்தை அதிகரித்தநிலையில், 50,000 என்ற அளவில் எல்லையில் துருப்புகளை அதிகரித்தது சீனா. பாங்கோங் சோ ஏரியைச் சுற்றியிருக்கும் புவியியல் முக்கியவத்துவம் வாய்ந்த பகுதிகள் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அங்கு போதிய அளவில் இந்தியப் படைகளும் குவிக்கப்பட்டிருக்கின்றன. இது சர்வதேச அளவில் கவனம் பெற்றது. எல்லையில் அமைதி திரும்புவது தொடர்பாக இருதரப்பிலும் பல்வேறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன. இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை.

Pangong Tso: `பாங்கோங் சோ ஏரி இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?' - சீன ஊடுருவல் முறியடிக்கப்பட்ட பின்னணி!

எல்லையில் படைகளைக் குறைப்பதாக சீனா கூறினாலும், அதைக் கண்மூடித்தனமாக நம்பப்போவதில்லை என்கிறார்கள் இந்திய ராணுவ அதிகாரிகள். எல்லையில் அத்துமீறும் வகையில் சீனா, அதிக அளவில் வீரர்களைக் குவித்து, எல்லையை நோக்கி வந்தாலே தற்காப்புக்காக ஆயுதங்களைப் பயன்படுத்த இந்திய வீரர்களுக்கு பாதுகாப்புத்துறை கிரீன் சிக்னல் கொடுத்திருப்பதாகவும் அவர்கள் சொல்கிறார்கள்.

லடாக்
லடாக்

எல்லையில், 50,000 வீரர்களைக் குவித்திருப்பதுடன், ஏவுகணை அமைப்புகள், பீரங்கிகள் உள்ளிட்டவற்றையும் சீனா குவித்திருக்கிறது. எந்தச் சூழலையும் எதிர்க்கொள்ளும் வகையில் இந்திய ராணுவம் தயார்நிலையில் இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கருதினாலே, ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என்று எல்லையில் முன்களத்தில் இருக்கும் வீரர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதே தகவல் சீனாவுக்கும் பேச்சுவார்த்தையின்போது தெரிவிக்கப்பட்டுவிட்டது.

இந்திய ராணுவத் தளபதி எம்.எம்.நரவானே
இந்திய ராணுவத் தளபதி எம்.எம்.நரவானே
Twitter/@adgpi

கூட்டமாக வந்து தாக்குவது, ஆயுதங்களைக் காட்டி மிரட்டுவது போன்ற சீனாவின் எத்தகைய அச்சுறுத்தலுக்கும் தகுந்த பதிலடி கொடுக்க உரிய உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் இந்திய ராணுவ வட்டாரத்தில். கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் சீனியர் கமாண்டர் உட்பட ஐந்து பேர் இறந்ததை சீனா முதன்முறையாக ஒப்புக்கொண்டிருப்பதாகச் சொல்லும் ராணுவ அதிகாரிகள், அவர்கள் சொல்வதைவிட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் களநிலவரம் பகிர்கிறார்கள்.

லடாக் எல்லையில் போர்மேகம் சூழ்ந்திருக்கிறது!

India-China Face-Off: `DSDBO சாலை... கிளாஸ் 70; அக்டோபர் 15 டார்கெட்!’ - என்ன நடக்கிறது எல்லையில்?
அடுத்த கட்டுரைக்கு