Published:Updated:

சணல் கொண்டு தயாரிக்கப்பட்ட புதுரக கோட்டுகள்!- மாடுகளைக் காக்கக் களமிறங்கிய அயோத்தி மாநகராட்சி

புகலிடங்களின் தட்பவெப்பத்தை கதகதப்பாக வைத்துக்கொள்ளும் வகையில் வைக்கோல் புற்களைக்கொண்டு நிரப்பப்பட்டிருக்கும். பசுக்களுக்கு சேவை செய்வதே எங்கள் நோக்கம்.

அயோத்தி
அயோத்தி

இந்தியா முழுவதும் குளிர்காலம் தொடங்கி, பருவநிலை மாறிவருகிறது. பனியும் காற்று மாசும் நாளுக்குநாள் தீவிரமடைந்துவரும் தலைநகர் டெல்லியில் தங்குவதற்கு வீடற்ற 13,000 மனிதர்கள் தெருக்களில் அவதிப்படுவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

டெல்லி
டெல்லி

அவர்களுக்காகக் கட்டப்பட்டிருக்கும் தங்கும் விடுதிகள் ஆரோக்கியமற்று இருப்பதால், அதில் தங்குவதைவிட மக்கள் தெருக்களில் வசிப்பதையே மேலாகக் கருதுகின்றனர் என்றும் கூறப்படுகின்றன.

இதற்கிடையே அயோத்தி மாநகராட்சி குளிர்காலத்திலிருந்து, மாடுகளைக் காப்பாற்ற சணல் கொண்டு தயாரிக்கப்பட்ட கோட்டுகளை வாங்க முடிவுசெய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி மாநகராட்சி
அயோத்தி மாநகராட்சி

இதுதொடர்பாகப் பேசியுள்ள மாநகராட்சி ஆணையர் நீரஜ் சுக்லா, ``அயோத்தியின் பைசிங்பூர் புகலிடத்தில் 1,200 மாடுகள் இருக்கின்றன. அவற்றில் 700 காளைகளும் அடக்கம். இவை அனைத்துக்கும் சணல் கொண்டு தயாரிக்கப்பட்ட 1,200 கோட்டுகள் வாங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 100 கோட்டுகள் வாங்கப்பட இருக்கின்றன" என்றார்.

மாட்டின் கழுத்துப் பகுதியிலும் கால் பகுதியிலும் பொருத்தப்படும் பெல்ட் கோட்டு நழுவாமல் பார்த்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ரூ.250 முதல் ரூ.300 வரையில் விற்கப்படும் இந்த கோட்டுகள் ஏற்கெனவே அமெரிக்காவில் புழக்கத்தில் இருக்கின்றன.

இவற்றில் கன்றுக்குட்டிகளுக்கு மூன்று லேயர்கள் கொண்ட கோட்டுகளும் பசுமாடுகளுக்கு இரண்டு லேயர்கள் கொண்ட கோட்டுகளும் காளைமாடுகளுக்கு முழுதும் சணலால் செய்த கோட்டுகளும் தயாரிக்கப்படுகின்றன.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

இதுகுறித்துப் பேசியுள்ள அயோத்தி  மேயர்  ரிஷிகேஷ்  உபாத்யாயா, ``புகலிடங்களின் தட்பவெப்பத்தைக் கதகதப்பாக வைத்துக்கொள்வதற்காக வைக்கோல் புற்கள்  கொண்டு  நிரப்பப்பட்டிருக்கும். பசுக்களுக்குச் சேவை செய்வதே எங்கள் நோக்கம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதத்தில் உத்தரப்பிரதேச முகாம்களில் இருந்த முந்நூறுக்கும் மேற்பட்ட மாடுகள் பசியால் இறந்துபோயின. இச்சம்பவம் ஏற்கெனவே சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.