Published:Updated:

ம.பி: வணிக வளாகத்தில் தொழுகை நடத்த எதிர்ப்பு; அனுமான் சாலிசா பாடிய பஜ்ரங் தள் அமைப்பினர்- பரபரப்பு

மாலில் தொழுகை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ( ட்விட்டர் )

மத்தியப் பிரதேசத்தில் வணிக வளாகம் ஒன்றில் சில ஊழியர்கள் தொழுகை நடத்தியதற்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில், வணிக வளாகம் ஒன்று செயல்பட்டுவருகிறது. அந்த வணிக வளாகத்துக்குள் சிலர் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கேள்விபட்ட பஜ்ரங் தள் அமைப்பினர் சிலர் வணிக வளாகத்துக்குள் வந்து, தொழுகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தொழுகை நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுமான் சாலிசாவை ஸ்தாபனத்தில் ஓதுவோம் என்று மால் நிர்வாகத்தினரிடம் வாக்குவாதம் செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில், இது தொடர்பாக போராட்டக்காரர்களுக்கு தலைமை தாங்கிய அபிஜீத் சிங் ராஜ்புத் கூறுகையில், “வணிக வளாகத்திலுள்ள ஒரு தளத்தில் சிலர் தொழுகை நடத்துவதாக கடந்த ஒரு மாதமாக எங்களுக்குத் தகவல் வருகிறது. நாங்கள் இன்று அங்கு வந்து தொழுகை நடத்தும் 10 முதல் 12 பேரைப் பிடித்தோம்’’ என்றார்.

மேலும் இது தொடர்பாக அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, ``போராட்டம் குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு ஒரு போலீஸ் குழு அனுப்பப்பட்டது. ஆனால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றபோது பஜ்ரங் தள உறுப்பினர்கள் வணிக வளாகத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். இது தொடர்பாக யாரும் புகார் அளிக்கவில்லை’’ என்றார்.