Published:Updated:

ஃபிரெஷர்ஸ் டே கொண்டாட்டம்... ராம்ப் வாக் பயிற்சி- பெங்களூரு மாணவிக்கு நேர்ந்த சோகம்!

பெங்களூருவில் தனியார் கல்லூரி மாணவி ராம்ப் வாக் பயிற்சியில் ஈடுபட்டபோது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Representation Image
Representation Image

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் பீன்யா பகுதியில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் ஷாலினி என்ற மாணவி முதலாமாண்டு எம்.பி.ஏ பட்டப்பிடிப்பு பயின்று வருகிறார். ஃபிரெஷர்ஸ் டே கொண்டாட்டங்களுக்காக மாணவிகள் தயாராகி வந்துள்ளார். ஷாலினி மற்றும் அவரின் தோழிகள் சிலர் ஃபிரெஷர்ஸ் டே நிகழ்ச்சியில் ராம்ப் வாங் செய்வதற்காகப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஃபிரெஷர்ஸ் டே கொண்டாட்டம்... ராம்ப் வாக் பயிற்சி- பெங்களூரு மாணவிக்கு நேர்ந்த சோகம்!

அப்போது மாணவி ஷாலினி திடீரென மயங்கி விழுந்தார். இதனால் பதற்றமடைந்த தோழிகள் தண்ணீர் தெளித்து எழுப்பிப் பார்த்துள்ளனர். மாணவி பேச்சு மூச்சற்ற நிலையில் இருந்ததையடுத்து உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக காவல்நிலையத்தில் தெரிவிக்கப்பட்டது. கல்லூரிக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் ஷாலினியின் நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், மாணவி மற்றும் அவரின் தோழிகள் பயிற்சியில் ஈடுபட்ட இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அதில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் பதிவாகியுள்ளன.

மரணம்
மரணம்

இதுகுறித்து பேசிய காவல்துறை துணை ஆணையர், ஃபிரெஷர்ஸ் டே நிகழ்ச்சிகாக மாணவர்கள் பயிற்சி செய்யும்போதுதான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மாணவி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தோம். மேடைக்கு அருகில் நின்றிருந்தவர் அவருடைய சுற்று வரும்போது திடீரென தரையில் மயங்கிவிழுந்துள்ளார். மற்ற மாணவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்” என்றார்.