Published:Updated:

`தூண்கள் இல்லா மண்டபம்; `ரிக் வேத’ சிம்மாசனம்!’ - கல்கி `ஒன்னெஸ் டெம்பிள்' பின்னணி

ஒன்னெஸ் டெம்பிள்
ஒன்னெஸ் டெம்பிள்

கல்கி பகவான் மேல் ஏற்பட்ட ஈர்ப்பால் உலகம் முழுக்க எத்தனையோ பிரபலங்கள் பக்தர்களாக மாறினர். இப்படியான காலகட்டத்தில் ஒன்னெஸ் பல்கலைக்கழகத்தின் அடுத்த பிரமாண்டப் படைப்பாக கட்டப்பட்டதுதான் இந்த `ஒன்னெஸ் டெம்பிள்' ஆசிரமம்.

கல்கி பகவான் ஆசிரம ரெய்டுதான் கடந்த மூன்று நாள்களாக பல்வேறு ஆசிரமங்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள விஷயமாகப் பார்க்கப்படுகிறது. 500 கோடி ரூபாய்க்கு வரிஏய்ப்பு, 43.9 கோடி ரூபாய் இந்தியப் பணம், 18 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள், 26 கோடி மதிப்பிலான 88 கிலோ தங்க நகைகள், 5 கோடி மதிப்புள்ள வைர நகைகள், தமிழகம், ஆப்பிரிக்க நாடுகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நிலம் வாங்கியதற்கான ஆதாரங்கள் உள்ளிட்டவை ரெய்டில் சிக்கியுள்ளதாக வருமானவரித்துறை அறிக்கை சொல்கிறது.

`தூண்கள் இல்லா மண்டபம்; `ரிக் வேத’ சிம்மாசனம்!’ - கல்கி `ஒன்னெஸ் டெம்பிள்' பின்னணி

கல்கிக்கு உலக நாடுகளில் ஏகப்பட்ட ஆசிரமங்கள் இருந்தாலும் அதில் முக்கியமானது ஆந்திர மாநிலம் வரதபாளையத்தில், பிரமாண்டமாகக் காட்சியளிக்கும் `ஒன்னெஸ் டெம்பிள்'. கல்கி பகவானின் வளர்ச்சியையும் இந்த ஒன்னெஸ் டெம்பிளையும் பிரித்துப் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு கல்கியின் பக்தர்கள் மத்தியில் இந்த டெம்பிள் ஏகப் பிரபலம். 1989-ல், `நான் விஷ்ணுவின் அவதாரம். என் பெயர் கல்கி பகவான்' எனத் தனக்குத்தானே பறைசாற்றிக் கொண்டு கல்கி பகவான் ஆன விஜயகுமார் சென்னை பூந்தமல்லி அருகே உள்ள நேமம் கிராமத்தில் கல்கி ஆசிரமத்தை நடத்தி வந்தார்.

இந்த ஆசிரமத்துக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா எனப் பல்வேறு மாநிலங்களிலிருந்து மக்கள் வருவது வழக்கம். விஜயகுமாரின் ஒவ்வொரு செயலும் வித்தியாசமாக இருந்ததால் மக்கள் மத்தியில் ரீச் ஆனார். ஒவ்வொரு நாளும் படிப்படியாக வளர்ச்சி கண்ட கல்கி பகவான் உலகம் முழுவதும் அமைதியைப் பரப்பும் நோக்கில், ஆன்மிக கல்வியை மையமாக வைத்து 1999ல் சென்னை முடிச்சூர் அருகே `ஒன்னெஸ் பல்கலைக்கழகம்' என்ற திட்டத்தை தொடங்கினார். ஒன்னெஸ் யூனிவர்சிட்டியின் முக்கிய நோக்கம் உலகம் முழுவதும் மதம், சாதி, இன வேறுபாட்டைத் தவிர்த்து அமைதியை ஆன்மிக வழியிலில் பரப்ப வேண்டும் என்பதே.

`தூண்கள் இல்லா மண்டபம்; `ரிக் வேத’ சிம்மாசனம்!’ - கல்கி `ஒன்னெஸ் டெம்பிள்' பின்னணி

இதையே ஆசிரமத்தின் கொள்கைகளாக கொண்டுசெயல்பட சீடர்களின் வருகை நூறுகளிலிருந்து ஆயிரக்கணக்கில் அதிகரிக்கத் தொடங்கியது. கல்கி பகவான் மேல் ஏற்பட்ட ஈர்ப்பால் உலகம் முழுக்க எத்தனையோ பிரபலங்கள் பக்தர்களாக மாறினர். இப்படியான காலகட்டத்தில் ஒன்னெஸ் பல்கலைக்கழகத்தின் அடுத்த பிரமாண்ட படைப்பாக கட்டப்பட்டதுதான் இந்த `ஒன்னெஸ் டெம்பிள்' ஆசிரமம். இந்த ஆசிரமத்துக்கான இடத்தேர்வை இங்கே கண்டிப்பாகப் பேசி ஆக வேண்டும்.

`ஆப்பிரிக்காவில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம்; ரூ.20 கோடி?'- கல்கி ஆசிரமத்தை அதிரவைத்த ஐ.டி ரெய்டு

ஆந்திர மாநிலம் வரதபாளையம் திருப்பதி ஏழுமலையான் கோவிலிலிருந்து 70 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. வேலிகொண்டா மலைத்தொடரின் அழகிய காடுகள் சுற்றியிருக்க, சிறுஓடைகள் இடையிடையே சலசலக்க, ஒவ்வொரு இலையிலும், புல்லிலும்கூட தெய்விகம் நிறைந்திருக்கும் ஒரு ரம்யமான இடம் வரதபாளையம். மேகங்கள் தவழும் கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரான இந்தச் சிற்றூரில்தான் 42 ஏக்கர் அளவில் பிரமாண்ட படைப்பாக ஆசிரமம் கட்டியுள்ளார் கல்கி பகவான். திருப்பதிக்கும் சென்னைக்கும் இடையில் அமைந்துள்ள ஆன்மிக சக்திகள் நிறைந்த மலைத்தொடராக வேலிகொண்டா இருந்ததாலேயே இந்த இடத்தை ஆசிரமத்துக்காக கல்கி பகவான் தேர்வு செய்தார் என இன்றளவும் பக்தர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

`தூண்கள் இல்லா மண்டபம்; `ரிக் வேத’ சிம்மாசனம்!’ - கல்கி `ஒன்னெஸ் டெம்பிள்' பின்னணி

பசுமையான சூழலில் மூன்று தளங்களைக் கொண்ட இந்த ஆசிரமத்தின் படிக்கட்டு முதல் கோபுரம் வரை அனைத்தும் ராஜஸ்தான் வெள்ளை மார்பிள் கற்களால் பார்த்துப் பார்த்து கட்டப்பட்டு 2008ல் திறக்கப்பட்டது. ஆசிய அளவில் தூண்கள் இல்லாமல் 8000 பேர் ஒரேநேரத்தில் அமர்ந்து தியானம் செய்யக்கூடிய மண்டபம் அமைந்துள்ள ஒரே ஆசிரமம் என்றால் அது இந்த `ஒன்னெஸ் டெம்பிள்' மட்டுமே. 4 மூலைகளிலும் இந்து சாஸ்திரப்படி நீர் சூழ அமைக்கப்பட்டுள்ள இந்த ஆசிரமத்தின் மூன்று தளங்களும் ஒவ்வொரு சிறப்பைக் கொண்டுள்ளன. முதல் தளத்தில் ஆன்மிக வேலைப்பாடுகள் நிறைந்த பக்தர்கள் அமரும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது தளம் "அர்த்த காமா" என அழைக்கப்படுகிறது.

``முதல் விக்கெட் கல்கி... அடுத்த பட்டியலில் தமிழக ஆசிரமம்” - பின்னணியை விவரிக்கும் பி.ஜே.பி!

இதன் அர்த்தம் `ஆசைகளின் மண்டபம்' அல்லது சிக்கல்களைத் தீர்ப்பதாம். "தர்ம மோக்ஷா'' என அழைக்கப்படும் மூன்றாவது தளத்தில்தான் தூண் இல்லாத தியான மண்டபம் அமைந்துள்ளது. பக்தர்கள் தியானம் செய்யும்போது கல்கி பகவான் ஆசி அருள்வதும் இங்கேதான். இந்தத் தளத்தில் கல்கி மற்றும் அவரது மனைவி உட்கார `கம்பீரமான சிம்மாசனம்' என்ற பெயரில் சிம்மாசனம் அமைக்கப்பட்டுள்ளது. ரிக் வேத குறிப்புப்படி 175 வெவ்வேறு வகையான மரங்கள் கொண்டு இந்த சிம்மாசனம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் இன்னொரு சிறப்பம்சமாக இந்த சிம்மாசனத்தின் அருகிலேயே தங்கத்திலான மிகப்பெரிய பந்தும் உள்ளது.

`தூண்கள் இல்லா மண்டபம்; `ரிக் வேத’ சிம்மாசனம்!’ - கல்கி `ஒன்னெஸ் டெம்பிள்' பின்னணி

இதுபோக ஸ்ரீ சக்ரா, புனித கலாஷ், ஒன்பது கிரகங்களை குறிக்கும் வகையில் 9 கோபுரங்கள், தனித்துவக் கதவுகள் என இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பார்த்துப் பார்த்து கட்டப்பட்ட இந்த ஆசிரமத்தின் மதிப்பு இன்றளவும் எவ்வளவு என்று தெரியாத வண்ணம் உள்ளது. கல்கி பகவான் கண்ட 30 ஆண்டுக்கால அசுர வளர்ச்சிக்கு இந்த ஆசிரமம் ஆற்றிய பங்கு அளப்பரியது. ஆம், இந்த ஆசிரமம் கட்டிய பிறகுதான் பல பாலிவுட் நட்சத்திரங்கள் கல்கியின் சிஷ்யர்களாக மாறினார்கள். இதன்பின் அசுர வளர்ச்சி கண்ட கல்கியின் ஒன்னெஸ் பல்கலைக்கழகம் உலகம் முழுவதும் பல்வேறு கிளைகளைத் திறந்தது.

கிம்மின் திக் திக்... குதிரை சவாரி! - பதற்றத்தில் வடகொரியா மக்கள்

இருந்தாலும் இந்த வரதபாளையம் ஆசிரமத்தைக் காண வெளிநாட்டு பக்தர்கள் படையெடுக்கத் தொடங்கினர். அவ்வப்போது இங்கு ஆசி அருளும் கல்கி மற்றும் அம்மா பகவான் பக்தர்களுக்கு தீட்சை தரும் ஒரே இடமும் இந்த ஆசிரமும்தான். ஆனால், இந்த ஆசிரமத்தை நிர்வகித்து வருபவர் கல்கியின் ஒரே மகன் என்.வி.கே கிருஷ்ணா எனக் கூறப்படுகிறது. கல்கி பகவானைப் பார்க்க வேண்டுமென்றால் ரூ.50,000, அவரது பாதத்தை மட்டும் தரிசிக்க ரூ.10,000 என அனைத்திற்கும் பணம் கொடுக்க வேண்டும், ஆசிரமத்தில் பூஜைகள் செய்ய எக்கச்சக்க பணம், வெளிநாட்டு பக்தர்களுக்கு போதை பொருள் சப்ளை என இந்த ஆசிரமத்தைச் சுற்றிப் பல்வேறு சர்ச்சைகளும் ஏராளம்.

`தூண்கள் இல்லா மண்டபம்; `ரிக் வேத’ சிம்மாசனம்!’ - கல்கி `ஒன்னெஸ் டெம்பிள்' பின்னணி

இந்த பிரமாண்ட ஆசிரமத்தில், கடந்த 16-ம் தேதி முதல் மூன்று நாள்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். பல்வேறு அதிகாரிகள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து இங்கு சோதனை நடத்தியதில் கணக்கில் வராத நகை, பணம், அமெரிக்கா டாலர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வழக்குப்பதிவு, நீதிமன்ற வழக்குகள் என அடுத்தடுத்து பல சர்ச்சைகளுக்கு மத்தியிலும், இன்று வரை ஆயிரக்கணக்காக பக்தர்கள் கல்கியை கடவுளின் அவதாரமாகவே நம்பி இந்த ஆசிரமத்துக்கு படையெடுத்து வருகின்றனர்.

photo credit : religion scope

`பொறுமையை இழந்துட்டேன்;திங்கள்கிழமை என் யுத்தம் ஸ்டார்ட்!'-அதிகாரிகளை தெறிக்கவிடும் தி.மலை கலெக்டர்
பின் செல்ல