Published:Updated:

நிர்வாணப் புகைப்படங்களை பகிர்ந்த வருங்கால கணவர்! - ஆத்திரத்தில் காதலி செய்த அதிர்ச்சி சம்பவம்

க்ரைம் - கொலை

தனக்கு நிச்சயிக்கப்பட்ட காதலியின் நிர்வாணப் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட காதலன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நிர்வாணப் புகைப்படங்களை பகிர்ந்த வருங்கால கணவர்! - ஆத்திரத்தில் காதலி செய்த அதிர்ச்சி சம்பவம்

தனக்கு நிச்சயிக்கப்பட்ட காதலியின் நிர்வாணப் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட காதலன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
க்ரைம் - கொலை

சென்னையைச் சேர்ந்தவர் விகாஷ் ராஜன் (27). இவர் உக்ரைனில் எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்துவிட்டு சென்னையில் இரண்டு ஆண்டுகள் பயிற்சி முடித்திருக்கிறார். இவர் தேசிய மருத்துவ ஆணையத்தால் நடத்தப்படும் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தேர்வுக்கு (எஃப்.எம்.ஜி.இ) பயிற்சி பெற பெங்களூரு சென்றிருக்கிறார். அங்கு விகாஷுக்கு இளம்பெண் ஒருவர் அறிமுகமாகியிருக்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்திருக்கின்றனர். இருவரின் காதல் விவகாரம் விகாஷின் குடும்பத்தினருக்கு தெரியவர, அவர்களும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்திருக்கின்றனர். பெண் வீட்டிலும் சம்மதம் தெரிவிக்கவே, இருவருக்கும் நிச்சயதார்த்தம் அண்மையில் நடந்து முடிந்திருக்கிறது.

சமூக வலைதளம்
சமூக வலைதளம்

இந்த நிலையில், தன் வருங்கால மனைவியின் நிர்வாணப் புகைப்படங்களை சென்னையில் இருக்கும் தன் நண்பர்களுக்கு விகாஷ் அனுப்பியிருக்கிறார். மேலும், ஒரு போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி அதிலும் தன் காதலியின் புகைப்படங்களை பதிவேற்றியிருக்கிறார். செப்டம்பர் 8-ம் தேதி தன் நிர்வாணப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பார்த்த விகாஷின் காதலி, அது தொடர்பாக விகாஷிடம் கேட்டிருக்கிறார். அதற்கு விகாஷ் விளையாட்டாக அந்த படங்களை பதிவேற்றியதாக பதிலளித்திருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த விகாஷின் காதலி, நடந்த சம்பவம் குறித்து தன் நண்பர்களான சுஷில், கௌதம், சூர்யா ஆகியோரிடம் தெரிவித்திருக்கிறார். மேலும், இது தொடர்பாக பேச வேண்டும் எனக் கூறி பேகூர் அருகே நியூ மைக்கோ லேஅவுட்டில் உள்ள சுஷிலின் வீட்டுக்கு செப்டம்பர் 10-ம் தேதி வரவைத்திருக்கிறார். அங்கு சுஷில், கௌதம், சூர்யா ஆகியோர் விகாஷை தாக்கியிருக்கிறார்கள். அதனால் பலத்த காயமடைந்த விகாஷ் மயக்கமடைந்தார். உடனே அவரை மூவரும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
காவல்துறை
காவல்துறை

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த விகாஷ் செப்டம்பர் 14-ம் தேதி மரணமடைந்தார். விகாஷின் மூத்த சகோதரர் விஜய் கொடுத்த புகாரின் அடிப்படையில், சந்தேக நபர்கள்மீது பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை, ``குற்றம்சாட்டப்பட்டவர்களில் இருவரை கைதுசெய்துவிட்டோம். மூன்றாம் நபரான சூர்யாவை தேடி வருகிறோம். விகாஷை தாக்கியதற்கு பிறகு மூவரும் அவரை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். அதனால், கொலைசெய்வது அவர்கள் நோக்கமல்ல என விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

அந்தப் பெண்ணின் அறிவுறுத்தலின் பேரில்தான் அந்த மூவரும் தாக்கியிருக்கிறார்கள். அதனால், அந்தப் பெண்ணையும் ஒரு குற்றவாளியாகக் குறிப்பிட்டு செப்டம்பர் 16-ம் தேதி அவரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருக்கிறோம். மேலும் விசாரணைக்காக அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறது.