Published:Updated:

முற்றிய வாக்குவாதம்... 2016-ல் நடந்த மூதாட்டி கொலை வழக்கில் மகளும் பேரனும் கைது! - நடந்தது என்ன?!

கொலை
News
கொலை ( மாதிரிப் படம் )

வீட்டின் உரிமையாளர் மே 2017-ல் வீட்டைப் புதுப்பிக்கும்போது, ​​வீட்டின் அலமாரியில் அழுகிய சடலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

முற்றிய வாக்குவாதம்... 2016-ல் நடந்த மூதாட்டி கொலை வழக்கில் மகளும் பேரனும் கைது! - நடந்தது என்ன?!

வீட்டின் உரிமையாளர் மே 2017-ல் வீட்டைப் புதுப்பிக்கும்போது, ​​வீட்டின் அலமாரியில் அழுகிய சடலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

Published:Updated:
கொலை
News
கொலை ( மாதிரிப் படம் )

பெங்களூரில் ஆகஸ்ட் 2016-ல், 70 வயது மூதாட்டியைக் கொலைசெய்து வீட்டில் புதைத்த மகளையும், பேரனையும் போலீஸார் கைதுசெய்தனர். இது தொடர்பாக வெளியான செய்தியில், கடந்த 2016-ம் ஆண்டு, பெங்களூரு கெங்கேரி சாட்டிலைட் டவுன் பகுதியில் வசிக்கும் 27 வயதான சஞ்சய் வாசுதேவ் ராவ், தன் பாட்டி சாந்த குமாரியிடம் கோபி மஞ்சூரியன் உணவு தொடர்பாக வாய்த் தகராறு செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில் வாய்த் தகராறு முற்றியதாகக் கூறப்படுகிறது.

காவல்துறை
காவல்துறை

இந்தச் சண்டையில் ஆத்திரமடைந்த சஞ்சய், தனது பாட்டியைக் அடித்துக் கொன்றுவிட்டார். இந்தத் தகவலைத் தன் தாயார் சசிகலாவிடமும் தெரிவித்திருக்கிறார். இறந்த உடலை என்ன செய்வது எனத் தெரியாததால் சஞ்சய், தன் நண்பரான நந்தீஷிடம் உடலை அடக்கம் செய்ய உதவி கோரினார். மூவரும் சேர்ந்து மூதாட்டியின் உடலை கரி மற்றும் சிமென்ட்டால் மூடி வீட்டிலுள்ள ஓர் அலமாரியில் புதைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு சஞ்சய், அவரின் தாயார் சசிகலா ஆகியோர் பிப்ரவரி 2017-ல் வீட்டை காலி செய்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், வீட்டின் உரிமையாளர் மே 2017-ல் வீட்டைப் புதுப்பிக்கும்போது, ​​வீட்டின் அலமாரியில் அழுகிய சடலத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். உடனே இந்தத் தகவலை காவல்துறைக்கும் தெரிவித்திருக்கிறார். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் அதிகாரிகள் உடலை அடையாளம் கண்டிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், நந்தீஷை கைதுசெய்தனர். குற்றச்சாட்டுகளை அழித்த குற்றச்சாட்டில், மூன்றாவது குற்றவாளியாகப் பதிவுசெய்தனர்.

கைது
கைது

இதற்கிடையில், தாய், மகன் இருவரும் மகாராஷ்டிராவின் கோலாபூருக்குத் தப்பிச் சென்றனர். சஞ்சய் தன் ஏரோநாட்டிகல் பொறியியல் படிப்பைவிட்டு வெளியேறி, ஓர் உணவகத்தில் பணியாளராக வேலைபார்த்து வந்தார். அவரின் தாயார் சசிகலா கோலாப்பூரில் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்தார். அவர்களைத் தீவிரமாக தேடிவந்த காவல் அதிகாரிகள், கோலாப்பூரில் வங்கிக் கணக்கு தொடங்க குற்றவாளிகள் அளித்த விவரங்கள் மூலம் கண்டுபிடித்து கைதுசெய்திருக்கிறார்கள்.