Published:Updated:

Indigo இணையதளத்தை ‘ஹேக்’ செய்து தொலைந்த தன் லக்கேஜை கண்டுபித்த இளைஞர்! பின்னணி என்ன?

நந்தகுமார்

நந்தகுமார் என்பவர் தொலைந்த தன் லக்கேஜை கண்டுபிக்க இண்டிகோ நிறுவனத்தின் இணையதளத்தை ‘ஹேக்’ செய்துள்ளார்.

Indigo இணையதளத்தை ‘ஹேக்’ செய்து தொலைந்த தன் லக்கேஜை கண்டுபித்த இளைஞர்! பின்னணி என்ன?

நந்தகுமார் என்பவர் தொலைந்த தன் லக்கேஜை கண்டுபிக்க இண்டிகோ நிறுவனத்தின் இணையதளத்தை ‘ஹேக்’ செய்துள்ளார்.

Published:Updated:
நந்தகுமார்

நந்தகுமார் என்பவர் பாட்னாவிலிருந்து பெங்களூருக்கு இண்டிகோ விமானத்தில் பயணித்துள்ளார். அப்போது விமான நிலையத்தில் தனது லக்கேஜூக்கு பதிலாக ஒரேமாதிரி இருக்கும் தன் சக பயணியின் லக்கேஜை மாற்றி எடுத்து வந்துள்ளார். அவர் வீட்டுக்கு வந்து அவரின் மனைவி சொன்னபோதுதான் தெரிந்தது தான் எடுத்த வந்த லக்கேஜ் வேறொருவருடையது என்று. பின்பு இண்டிகோ நிறுவனத்தை அணுகிய நந்தகுமார் நடந்த சம்பவத்தை விளக்கியுள்ளார். பின்பு இண்டிகோ நிறுவனம் சம்பந்தப்பட்ட நபருக்கு போன்செய்து தொடர்புகொள்ள முயற்சி செய்துள்ளது. ஆனால் அவர் போனை எடுக்காததால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.

மாதிரி படம்
மாதிரி படம்

அதன் பின் நந்தகுமார் தன் லக்கேஜை மாற்றி எடுத்துச் சென்ற அந்த சக பயணியின் விவரத்தை கேட்டுள்ளார். பாதுகாப்புக் காரணங்கள் கருதி இண்டிகோ நிறுவனம் விவரங்களை கொடுக்க மறுத்துள்ளது. இதையடுத்து நந்தகுமார் மாற்றி எடுத்துவந்த லக்கேஜில் சக பயணியின் PNR எண் இருந்துள்ளது. இதன் மூலம் தன் கணினியைப் பயன்படுத்தி இண்டிகோ இணையதளத்தை ஹேக் செய்து தன்னுடன் பயணித்த அந்த சக பயணியின் விவரங்களை எடுத்து அவரைத் தொடர்பு கொண்டுள்ளார். பின்பு அவரை நேரில் சந்தித்து மாற்றி எடுத்து வந்த லக்கேஜை அவரிடம் கொடுத்து தனது லக்கேஜைப் பெற்றுகொண்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேலும் இதோடு நிறுத்தாமல், தனது டிவிட்டர் பக்கத்தில் இண்டிகோ நிறுவனத்தை டேக்செய்து 'உங்கள் கணினியில் உள்ள தொழில்நுட்ப பாதிப்பு பற்றி நான் உங்களுக்குச் சொல்கிறேன்?' என்றும் 'உங்கள் IVRஐ சரிசெய்து, அதை பயனர்களுக்கு ஏற்றதாக மாற்றவும். உங்கள் வாடிக்கையாளர் சேவையை அதிக செயல்திறன் கொண்டதாக ஆக்குங்கள். உங்கள் இணையதளத்தில் முக்கியமான தரவுகள் கசிந்தால் அதை சரிசெய்துவிடுங்கள்' என்று இண்டிகோ நிறுவனத்திற்கு அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் 'இது எனது லோ-கீ ஹேக்கர் தருணம்' என்று பெருமைப்படும்படி ட்வீட் செய்துள்ளார்.

இதை மறுத்துள்ள இண்டிகோ நிறுவனம் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் இண்டிகோ ஒருபோதும் சமரசம் செய்யாது என்று தெரிவித்துள்ளது. மேலும் 'எந்தவொரு பயணியும் இணையதளத்தில் இருந்து PNR, கடைசி பெயர், தொடர்பு எண் அல்லது மின்னஞ்சல் முகவரி போன்றவற்றைப் பயன்படுத்தி தங்கள் முன்பதிவு விவரங்களைப் பெறலாம். இது உலகளவில் அனைத்து விமான அமைப்புகளிலும் நடைமுறையில் உள்ள சாதாரண விதிமுறையாகும். எனினும் உங்களின் கருத்துக்களை பரிசீலனை செய்கிறோம்' என்று தெரிவித்துள்ளது இண்டிகோ நிறுவனம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism