Published:Updated:

புற்றுநோய்க்கு மருந்து கொடுப்பதாகக் கூறி மோசடி; மனைவியை இழந்த கணவர்; போலீஸில் புகார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
Patient at Hospital (Representational Image)
Patient at Hospital (Representational Image) ( Image by Parentingupstream from Pixabay )

பெங்களூரின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜீவன் பீமா நகரைச் சேர்ந்தவர், 46 வயதாகும் பேராசிரியர். இவரின் மனைவி கடந்த ஆகஸ்ட் மாதம் புற்றுநோயின் காரணமாக உயிரிழந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவரின் மனைவிக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

புற்றுநோயாளரான தன் மனைவியின் திடீர் மரணத்திற்கு மருந்துக் கடைக்காரரும், அவருடன் இருந்த இரண்டு பேரும்தான் காரணம் என பெங்களூரைச் சேர்ந்த பேராசிரியர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

புற்றுநோயாளியான தன் மனைவியைக் குணப்படுத்துவதாகக் கூறி ஆயுர்வேத மருந்துகளை விற்ற மருந்துக்கடை உரிமையாளர், அவருடன் தொடர்புடைய இருவர் என மூன்று பேரும் சேர்ந்து, தன் மனைவியைப் புற்றுநோயில் இருந்து காப்பாற்ற மருந்து தருவதாகக் கூறி, 4.4 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அந்தப் பேராசிரியர் காவல்துறையில் புகாரளித்துள்ளார்.

Cancer
Cancer
Photo by Anna Shvets from Pexels
சிறார் வதை வழக்கு: 30 நாள்களுக்குள் குற்றவாளிக்கு தண்டனை வழங்கிய குஜராத் போக்ஸோ நீதிமன்றம்!

பெங்களூரின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜீவன் பீமா நகரைச் சேர்ந்தவர், 46 வயதாகும் பேராசிரியர். இவரின் மனைவி கடந்த ஆகஸ்ட் மாதம் புற்றுநோயின் காரணமாக உயிரிழந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவரின் மனைவிக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றிருந்த போது, சந்தோஷ் என்பவர் பேராசிரியரை அணுகி, ``என் நண்பர் சங்கர் யாதவ்வின் மனைவியும் இதே போன்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பின்பு நண்பர் ஒருவரின் ஆயுர்வேத மருந்துக்கடையில் மருந்து வாங்கிக் கொடுத்த பின் குணமடைந்துவிட்டார். உங்கள் மனைவியையும் அந்த மருந்தின் மூலம் குணப்படுத்தலாம்" எனக் கூறியதை நம்பிய பேராசிரியர், தன் மொபைல் நம்பரை அவரிடம் பகிர்ந்துள்ளார்.

மொபைல் நம்பர் பகிர்ந்த இரண்டு நாள்களில், சங்கர் யாதவ் என்பவர் பேராசிரியரைத் தொடர்பு கொண்டு, ``என் மனைவிக்கு அந்த மருந்தைக் கொடுத்துதான் குணப்படுத்தினேன்" என்று பேச, அவர் பரிந்துரைத்த மருந்துகளை அவர் கூறிய பெங்களூரின் கப்பங்கோட்டை சாலையில் உள்ள சிவசக்தி மருந்துக் கடையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆரம்பத்தில் தன் மனைவிக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார் பேராசிரியர். ``அம்மாத இறுதியில் என் மனைவியின் உடல்நிலை மிக மோசமாகி இறந்துவிட்டார்" என்று கூறும் பேராசிரியர், இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். மேலும், ``என் மனைவியின் மரணத்துக்கு காரணமானதுடன், அவர்கள் திட்டமிட்டு என்னை ஏமாற்றியுள்ளனர்" என்று கூறியுள்ளார்.

Death (Representational Image)
Death (Representational Image)
``பெண் ஆசிரியர்களுக்கு புடவை என்பது கட்டாயமில்லை!" - கேரள உயர்கல்வித் துறை அமைச்சர்

``என் மனைவியின் உடல்நிலை மோசமாகி இறந்ததற்கு சந்தோஷ், சங்கர் யாதவ், ஆயுர்வேத கடை உரிமையாளர் குமார் கவுடா ஆகியோர்தான் காரணம். இதுமட்டுமல்லாமல், மருந்துக்கு எனக் கூறி என்னிடம் நான்கு லட்சத்துக்கும் மேல் பண மோசடி செய்துவிட்டனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்" என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் பேராசிரியர். இதனையடுத்து அவர்கள் மூவரின் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 420-ன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், இது ஒரு திட்டமிட்ட குற்றம் போல் தெரிகிறது என்றும் கூறியுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு