Published:Updated:

24 ரூபாய்க்காக 7000 ரூபாய் கட்டிய ரிலையன்ஸ்! - கேரிபேக் வழக்கில் சாதித்த பெங்களூரு வாடிக்கையாளர்!

ரிலையன்ஸ்

பெங்களூரைச் சேர்ந்த நபர் ஒருவர் கேரி பேக்கிற்கு, பணம் வசூலித்ததால் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத்தொடர்ந்து பணத்தைத் திரும்பப் பெற்றிருக்கிறார்.

24 ரூபாய்க்காக 7000 ரூபாய் கட்டிய ரிலையன்ஸ்! - கேரிபேக் வழக்கில் சாதித்த பெங்களூரு வாடிக்கையாளர்!

பெங்களூரைச் சேர்ந்த நபர் ஒருவர் கேரி பேக்கிற்கு, பணம் வசூலித்ததால் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத்தொடர்ந்து பணத்தைத் திரும்பப் பெற்றிருக்கிறார்.

Published:Updated:
ரிலையன்ஸ்

பெரிய நிறுவனங்களில், துணிகளையோ பொருள்களையோ வாங்கிக்கொண்டு வெளியே வரும்போது, கேரிபேக்குகளை காசு கொடுத்து விலைக்கு வாங்க நிர்ப்பந்திக்கப்படுகிறோம். பிளாஸ்டிக் கவர்கள் தடை என்பதால் மாற்றுப் பைகளுக்காக இந்த விலை நிர்ணயிக்கப்படுகிறது. சில நேரங்களில் வேறு வழியின்றி நம்மில் பலர் அதைக் காசு கொடுத்து வாங்கியும் கொள்கிறோம். பெரும்பாலும் யாரும் அதை எதிர்த்து கேள்வி கேட்பதில்லை. ஆனால் பெங்களூரைச் சேர்ந்த ஒரு நபர் கேரிபேக்கிற்கு, பணம் வசூலித்ததால் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்து தன் பணத்தைத் திரும்பப் பெற்றிருக்கிறார். 

பெங்களூரைச் சேர்ந்தவர் 34 வயதான ரவிகிரண். இவர் ஜூலை 10- ஆம் தேதி பெங்களூரில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடைக்கு தன் மனைவியுடன் சென்று 2,000 ரூபாய்க்கு மேல் ஷாப்பிங் செய்திருக்கிறார். இருப்பினும், பில்லிங் கவுண்டரில் விற்பனையாளர்கள் அவரிடம் ஒரு கேரிபேக்கிற்கு 24 ரூபாய் கொடுக்கச் சொன்னதால் அதிர்ச்சி அடைந்துள்ளார். முதலில் வாதிட்ட அவர்கள், பின் வேறு வழியின்றி காசு கொடுத்து கேரிபேக்கை வாங்கியுள்ளனர்.

ரிலையன்ஸ்
ரிலையன்ஸ்

இதன் பிறகு ரவிகிரண் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடி கேரிபேக்கிற்கு பணம் வசூலித்ததற்காக ரிலையன்ஸ்  நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருக்கிறார். இதனால் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு நீதிமன்றம் சார்பாக சட்டப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும், சில்லறை விற்பனையாளர் ஆஜராகத் தவறியதால், ரிலையன்ஸ் நிறுவனம் ரவிகிரணுக்கு இழப்பீடாக 5,000 ரூபாயும் அவரது நீதிமன்ற செலவுக்காக 2,000 ரூபாயும் வழங்குமாறு தீர்ப்பு வழங்கியுள்ளது. இனி கடைகளில் கேரிபேகுக்கு எனக் கட்டணம் விதிப்பதைக் கடைகள் நிறுத்துமா?