Published:Updated:

``இங்கு கிரிப்டோ கரன்சி ஏற்றுக்கொள்ளப்படும்!" - இணையத்தில் வைரலாகும் பெங்களூரு டீக்கடை

டீக்கடை ( ட்விட்டர் )

பெங்களூருவில் டீக்கடை வைத்திருக்கும் இளைஞர் ஒருவர் தனது கடையில் கிரிப்டோ கரன்சியின் மூலம் கட்டணத்தை செலுத்திக்கொள்ளலாம் என போர்டு வைத்திருக்கிறார்.

``இங்கு கிரிப்டோ கரன்சி ஏற்றுக்கொள்ளப்படும்!" - இணையத்தில் வைரலாகும் பெங்களூரு டீக்கடை

பெங்களூருவில் டீக்கடை வைத்திருக்கும் இளைஞர் ஒருவர் தனது கடையில் கிரிப்டோ கரன்சியின் மூலம் கட்டணத்தை செலுத்திக்கொள்ளலாம் என போர்டு வைத்திருக்கிறார்.

Published:Updated:
டீக்கடை ( ட்விட்டர் )

உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகி வரும் சூழலில் கிரிப்ட்டோ கரன்சி என்பது இன்று இளைய தலைமுறையினரிடம் பிரபலமாகி வருகிறது. பொதுவாக டீக்கடைகளில் `இங்கு பேடிஎம், கூகுள் பே, போன் பே மூலம் பணம் ஏற்றுக்கொள்ளப்படும்' எனக் குறிப்பிடப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். ஆனால் சற்று வித்தியாசமாக பெங்களூருவில் டீக்கடைக்காரர் ஒருவர் கிரிப்ட்டோ கரன்சி மூலம் கட்டணம் செலுத்திக் கொள்ளாம் என பேனர் வைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

பெங்களூரு மாரத்தஹள்ளி பகுதியில் இளைஞர் ஒருவர் தெரு ஓரத்தில் டீக்கடை ஒன்று வைத்திருக்கிறார். அவர் தன்னுடைய கடையில் கிரிப்டோ கரன்சியின் மூலம் கட்டணத்தை பெற்றுக்கொள்வதாக ஒரு போர்டு வைத்திருக்கிறார்.

அது தொடர்பான புகைப்படத்தை அக்ஷய் சைனி என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் கிரிப்ட்டோ கரன்சி இன்னும் சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

அந்த டீக்கடைக்காரர் 2021-ம் ஆண்டு வரை கிரிப்ட்டோ கரன்சி வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அப்போது அந்த வர்த்தகத்தில் கணிசமான பணத்தை இழந்ததால், அவர் இந்த டீக்கடையைத் திறந்தார். இதற்கு ஆரம்பத்தில் 30,000 ரூபாய் முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது. அமெரிக்க டாலர் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பை ஒப்பிட்டு, அதன்பின்னரே அவர் தனது டீக்கடையிலுள்ள பொருள்களின் விலையை நிர்ணயம் செய்து போர்டு வைப்பதாகக் கூறப்படுகிறது.