Published:Updated:

`நேரமாயிடுச்சு நான் கிளம்புறேன்' - உணவு டெலிவரி செய்யும் மாற்றுத் திறனாளியின் நெகிழ்ச்சிக் கதை

கிருஷ்ணப்பா ரத்தோட்

தற்போது ​​ஸ்விக்கி டெலிவரி செய்யும் மாற்றுத்திறனாளி ஒருவரின் கதை இணையத்தில் வைரலாகி வருகிறது.

`நேரமாயிடுச்சு நான் கிளம்புறேன்' - உணவு டெலிவரி செய்யும் மாற்றுத் திறனாளியின் நெகிழ்ச்சிக் கதை

தற்போது ​​ஸ்விக்கி டெலிவரி செய்யும் மாற்றுத்திறனாளி ஒருவரின் கதை இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published:Updated:
கிருஷ்ணப்பா ரத்தோட்
ஸ்விக்கி, ஸொமேட்டோ போன்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் பலர் வேலை செய்து வருகின்றனர். இதுபோன்ற உணவு டெலிவரி செய்யும் வேலைகளில் பணிபுரிபவர்களின் வாழ்க்கை கடினமான ஒன்று.

சில சமயங்களில் அதிகமான ட்ராஃபிக் , மழை காலங்களில்கூட சரியான நேரத்தில் உணவை வழங்க வேண்டும் என்ற பொறுப்பும், கட்டாயமும் அவர்களுக்கு இருக்கும். தற்போது ​​ஸ்விக்கி டெலிவரி செய்யும் மாற்றுத்திறனாளி ஒருவரின் கதை இணையத்தில் வைரலாகி வருகிறது. கிருஷ்ணப்பா ரத்தோட் என்ற உணவு டெலிவரி மேனைப் பற்றி பெங்களூருவில் வசிக்கும் ரோஹித் குமார் சிங் என்பவர் சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், "நான் ஸ்விக்கியில் உணவை ஆர்டர் செய்திருந்தேன். ஆர்டர் செய்த உணவு வராமல் தாமதமாகிக் கொண்டே இருந்ததால் இதுகுறித்து உணவு டெலிவரி மேன் ஆன கிருஷ்ணப்பா ரத்தோட்டிடம் கேட்டேன். அதற்கு பதிலளித்த அவர் நான் உங்கள் ஆர்டரை சீக்கிரம் கொண்டு வந்து தந்துவிடுகிறேன் என்று கூறினார்.

கிருஷ்ணப்பா ரத்தோட்
கிருஷ்ணப்பா ரத்தோட்

இருப்பினும் சில நிமிடங்களுக்குப் பிறகும், ஆர்டர் செய்த உணவு வராததால், மீண்டும் அந்த நபருக்கு டயல் செய்தேன். அவர், `5 மினிட்ஸ் சார்' என்று என்னிடம் கூறினார். பின் 10 நிமிடங்கள் கழித்து காலிங் பெல் அடித்தார். உணவு வர தாமதமானதால் பொறுமையை இழந்த நான் அவரைத் திட்டிவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கதவைத் திறந்தேன். ஆனால் அந்த டெலிவரி மேனைப் பார்த்த பின் நான் செய்ய நினைத்தது முட்டாள்தனமான செயல் என்று உணர்ந்தேன். காரணம் அவருக்கு 40 வயது இருக்கும் நரைத்த முடியுடன் கையில் ஊன்றுகோல் ஒன்றை வைத்திருந்தார். ஆம் அவர் ஒரு மாற்றுத்திறனாளி. இதனை அறிந்த உடன் உடனடியாக நான் அவரிடம் மன்னிப்பு கேட்டேன். பிறகு அவரிடம் சிறிது நேரம் பேசினேன்" என்று ரோஹித் குமார் சிங் அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், ஒரு ஹோட்டலில் வேலை செய்து வந்த கிருஷ்ணப்பா ரத்தோட், கொரோனா தொற்றின்போது தனது வேலையை இழந்ததாகவும், தற்போது உணவு டெலிவரி மேன் ஆக வேலை பார்த்து வருவதாகவும், கிருஷ்ணப்பாவிற்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் கூறினார். ஆனால் அவரது பொருளாதார நிலை காரணமாக சிறந்த கல்வியை அவரது குழந்தைகளுக்கு கொடுக்க முடியவில்லை என்றும் ரோஹித் குமார் சிங் அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார்.

ரத்தோட் காலையில் வேலையை ஆரம்பித்தால் போதும் ஓய்வின்றி சற்றும் தளராமல் தனது பணியை செய்து முடித்து விடுவார், அசாத்திய திறமைகள் கொண்டவர் என்று ரோஹித் குமார் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருந்தார். மேலும், இரண்டு, மூன்று நிமிடங்கள் மட்டுமே நான் அவரிடம் பேசியிருப்பேன். அப்படி நான் பேசிக்கொண்டிருந்த போது திடீரென்று என்னை இடைமறித்த அவர் `அடுத்த டெலிவரிக்கு எனக்கு நேரம் ஆகிவிட்டது' என கிளம்பிவிட்டார்.

கிருஷ்ணப்பா ரத்தோட் பதில் இல்லாத நிறைய கேள்விகளை என்னிடம் விட்டுச்சென்றார். இந்த பதிவை பார்த்த பலரும் டெலிவரி மேன் கிருஷ்ணப்பா ரத்தோட்டுக்கு பாராட்டை தெரிவிப்பது மட்டுமின்றி,அவருக்கு உதவவும் முன்வந்துள்ளனர்.