Published:Updated:

`இதற்கு பேருந்தாவது விட்டிருக்கலாம்!’- பிரதமரின் ரூ.20 லட்சம் கோடி திட்டம் குறித்து தொழிலாளி கருத்து

தொழிலாளி
தொழிலாளி ( Representational image \ AP )

பிரதமரின் ரூ.20 லட்சம் கோடி திட்டத்துக்குப் பதிலாக நாங்கள் ஊருக்குச் செல்ல பேருந்து விட்டிருக்கலாம் என ஒரு தொழிலாளி வேதனை தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைப் போன்று பாதிப்பு இல்லாதவர்களும் தினம் தினம் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதும் போக்குவரத்து இல்லாததால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பல நூறு கிலோமீட்டர்கள் நடந்தே தங்கள் சொந்த ஊருக்குச் சென்றனர். இந்த விஷயம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

தொழிலாளர்கள்
தொழிலாளர்கள்
Representational image \ AP

இந்தியாவில் மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த நேரத்தில் தொழிலாளர்களின் இடப் பெயர்வைக் கட்டுப்படுத்த முடியாத மத்திய அரசு அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல சிறப்புப் பேருந்து மற்றும் ரயில் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது. இருந்தும் பலர் இன்னும் நடந்தே தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணப்பட்டு வருகின்றனர். இப்படி இடம் பெயரும் தொழிலாளர்கள் தாங்கள் செல்லும் வழியில் சந்திக்கும் பிரச்னைகள், விபத்துகள் போன்றவை ஏராளம். ஊரடங்கு காலத்தில் புலம் பெயர்வதால் மட்டும் பல தொழிலாளர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

`களைப்பால் தண்டவாளத்தில் தூக்கம்’ -14 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரைப் பறித்த காலி சரக்கு ரயில்

இந்நிலையில், இந்தியாவில் 4-ம் கட்ட ஊரடங்கு தொடர்பாக நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் பிரதமர் மோடி. அப்போது பேசிய அவர், ‘கொரோனா ஊரடங்கை சமாளிக்கப் போராடும் மக்களுக்காக ரூ.20 லட்சம் கோடி சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. இதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் கிடைக்கும். மேலும் இந்தத் திட்டம் சிறு குறு வணிகர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், நடுத்தர குடும்பத்தினர் குறிப்பாகப் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியவர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும்” எனப் பேசியிருந்தார்.

தொழிலாளர்கள்
தொழிலாளர்கள்
Representational image \ AP

இதற்கிடையில் பிரதமரின் இந்த அறிவிப்பு பற்றி புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் வசித்து வந்த லக்‌ஷ்மி ஷாஹு என்ற பெண் தொழிலாளி தன் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் 500 கி.மீ தொலைவில் இருக்கும் தன் சொந்த ஊரான சத்தீஷ்கருக்கு சைக்கிளில் சென்றுகொண்டிருந்துள்ளார். அவர் சாலை ஓரத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும்போது செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.

`விசைப்படகிலேயே சமையல்.. அங்கேயே உறக்கம்!' - 48 நாள்களாகத் தவிக்கும் 300 தொழிலாளர்கள்

ஊரடங்கு காலத்தில் தான் அனுபவித்த பிரச்னைகள் பற்றிப் பேசியுள்ள லக்‌ஷ்மி, “எங்களுக்கு எந்த வேலையும் இல்லாதபோது எப்படி மகிழ்ச்சி இருக்கும். நான் ஒரு தொழிலாளி. ஆனால், எங்களுக்கு வேலை இல்லை. நாங்கள் எப்படி உண்பது. இங்கு இருப்பதைவிடச் சொந்த ஊருக்குச் சென்று நிலத்தில் வேலை செய்து பிழைத்துக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டோம்.

தொழிலாளர்கள்
தொழிலாளர்கள்
Representational image \ AP

பிரதமர் அறிவிப்பால் என்ன நன்மை உள்ளது எனத் தெரியவில்லை. உத்தரப்பிரதேசத்தில், நாங்கள் இருந்த இடத்தில் எங்கும் எங்களுக்கு ரேஷன் கொடுக்கவில்லை. நான் மூன்று, நான்கு ரேஷன் கடைகளுக்குச் சென்றேன், அவர்கள் அனைவரும் ஆதார் அட்டை கேட்கிறார்களே தவிர, இந்த இக்கட்டான சூழலிலும் யாரும் ஒரு வேளைக்கு அரிசி தரவில்லை. இந்த அறிவிப்புக்குப் பதிலாகப் பேருந்துகளை இயக்கியிருந்தாலும் நாங்கள் வீட்டுக்குச் செல்ல உதவியிருக்கும். அது நடந்திருந்தால் அரசு எங்களுக்கு அந்த உதவியாவது செய்தது எனக் கூறியிருப்போம். இப்போது சொல்வதற்கு எதுவும் இல்லை” என வேதனையுடன் பேசியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு