Published:Updated:

`அவ்ளோ காசு இல்ல; கைது செய்துக்கோங்க'- ஆட்டோ ஓட்டுநரை அதிரவைத்த அபராதம்!

ராம் பிரசாத்

ஒடிசாவில் உரிய ஆவணங்களின்றி வாகனத்தை இயக்கிய ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ.47500 அபராதம் விதித்துள்ளனர்.

Auto Rickshaw
Auto Rickshaw

புதிய வாகன சட்டம் செப்டம்பர் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. போக்குவரத்துக் காவலர்கள் வாகன ஓட்டிகளிடம் கடும் கெடுபிடி காட்டி வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளானாலும் போதிய ஆவணங்கள் , ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகன ஓட்டுபவர்கள் சிக்கி வருகின்றனர். தினேஷ் மதனுக்கு டெல்லி போக்குவரத்துக் காவல்துறையினர் பல்வேறு சாலை விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறி நேற்று ஒரே நாளில் 23,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

Traffic violation
Traffic violation

லைசென்ஸ் இல்லாமல் வண்டியை ஓட்டுனதுக்கு ரூ.5,000, வாகனத்துக்கான ஆவணங்கள் இல்லாததற்கு ரூ. 5,000, இன்ஷுரன்ஸ் இல்லாததற்கு 2,000, காற்று மாசுபாட்டின் தரத்தை மீறியது ரூ.10,000, ஹெல்மெட் போடாமல் வாகனத்தை இயக்கியதுக்கு 1,000 என ரூ.23,000 அபராதம் விதித்தனர். இந்த நிலையில், ஒடிசா மாநிலம் புவனேஷ்வரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு அம்மாநில போக்குவரத்துக் காவலர்கள் 47,500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

`என்னால் அவரது பயணம் திசைமாறிவிடக் கூடாது!' - கண்ணீர்வடிக்கும் தெருவோரப் பாடகி ராணுவின் மகள்

ஆச்சார்யா விஹார் பகுதியில் போக்குவரத்துக் காவலர்களும், ஆர்.டி.ஓ அதிகாரியும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் வந்த ஆட்டோவை நிறுத்தி உரிய ஆவணங்கள் இருக்கிறதா என சோதனை செய்தனர். ஆட்டோ ஓட்டுநர் ஹரிபந்து கன்ஹார் மதுபோதையில் இருந்துள்ளார். அவரிடம் உரிய ஆவணங்களும் இல்லை. இதையடுத்து, அவருக்கு 47,500 ரூபாய் அபராதமாக விதித்தனர்.

Auto
Auto

ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் இயக்கியதற்கு 5,000, பர்மிட் நிபந்தனைகளை மீறியதற்கு 10,000, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்கு 10,000 , காற்று மாசுபாடு 10,000, அங்கீகரிக்கப்படாத நபரை வாகனம் ஓட்ட அனுமதித்ததற்கு 5,000, பதிவுச் சான்றிதழ் இல்லாததற்கு 5000, வாகன இன்ஷூரன்ஸ் இல்லாததற்கு 2000, பொதுவான குற்றங்கள் 500 என ரூ.47,500 அபராதம் விதித்தனர்.

அதிகாரிகளிடம் அபராதத்தொகையை செலுத்த முடியாது என ஆட்டோ ஓட்டுநர் ஹரிபந்து தகராறு செய்தார். `நீங்கள் கேட்கும் ஆவணங்கள் அனைத்தும் வீட்டில் இருக்கிறது எடுத்து வந்து காட்டுகிறேன்' என்றார். மேலும், இவ்வளவு பெரிய தொகையை என்னால் கட்ட முடியாது. என்னுடைய வண்டியை பறிமுதல் செய்யுங்க இல்லைன்னா என்ன ஜெயிலுக்கு அனுப்புங்க, என்னால் அபராதம் கட்ட முடியாது என்றார். வாகனத்தையும் ஓட்டுநரையும் காவலர்கள் பிடித்து வைத்துள்ளனர்