Published:Updated:

`பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது இதனால்தான்...' - விசாரணைக்குழு அறிக்கை!

ஹெலிகாப்டர் விபத்து
News
ஹெலிகாப்டர் விபத்து

விபத்து தொடர்பாக விசாரிக்க முப்படைகளின் தரப்பில் விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினர், நீலகிரி மாவட்டம் குன்னூரில் விபத்து நிகழ்ந்த காட்டேரி மலைப்பாதையில் நேரில் ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு மோசமான வானிலையே காரணம் என்று முப்படைகளின் விசாரணைக் குழு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

நீலகிரி மாவட்டம், காட்டேரியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி மதுலிகா உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த குரூப் கேப்டன் வருண் சிங்கும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பிபின் ராவத் - ராணுவ ஹெலிகாப்டர் விபத்து
பிபின் ராவத் - ராணுவ ஹெலிகாப்டர் விபத்து

அதையடுத்து, இந்த விபத்து தொடர்பாக விசாரிக்க முப்படைகளின் தரப்பில் விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினர், நீலகிரி மாவட்டம் குன்னூரில் விபத்து நிகழ்ந்த காட்டேரி மலைப்பாதையில் நேரில் ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
குன்னூர்
குன்னூர்

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி மற்றும் களத்தில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டது.

விசாரணைக் குழு அறிக்கை
விசாரணைக் குழு அறிக்கை

இந்த நிலையில், முப்படைகளின் விசாரணைக் குழு அறிக்கையின் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதில், `குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு மோசமான வானிலையே காரணம். ஹெலிகாப்டர் விபத்துக்கு இயந்திரக் கோளாறோ, கவனக்குறைவோ காரணம் இல்லை. எதிர்பாராத விதமாக ஏற்பட்ட திடீர் மேகக்கூட்டங்களுக்குள் ஹெலிகாப்டர் நுழைந்ததால்தான் விபத்துக்குள்ளானது' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.