Published:Updated:

``இந்தியர்கள் பலர் பெண்களை மனிதர்களாகக்கூடக் கருதுவதில்லை!" - ராகுல் காந்தி ட்வீட்

ராகுல் காந்தி - காங்கிரஸ்

டெல்லியில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, பல இந்தியர்கள் பெண்களை மனிதர்களாகக் கருதுவதில்லை என்று ராகுல் காந்தி விமர்சித்திருக்கிறார்.

``இந்தியர்கள் பலர் பெண்களை மனிதர்களாகக்கூடக் கருதுவதில்லை!" - ராகுல் காந்தி ட்வீட்

டெல்லியில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, பல இந்தியர்கள் பெண்களை மனிதர்களாகக் கருதுவதில்லை என்று ராகுல் காந்தி விமர்சித்திருக்கிறார்.

Published:Updated:
ராகுல் காந்தி - காங்கிரஸ்

டெல்லியில் ஷாதரா பகுதியில் சிலர் நபர்கள் பெண் ஒருவரைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அதோடு, அவருக்குச் செருப்பு மாலை அணிவித்து, முடியை வெட்டி அவரைத் தெருவில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அதைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்தக் கோரச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பாலியல் வன்கொடுமை 

சித்திரிப்புப் படம்
பாலியல் வன்கொடுமை சித்திரிப்புப் படம்

இது குறித்து டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவால், தனது ட்விட்டர் பக்கத்தில் அந்ப்த பெண்ணைத் தாக்கும் வீடியோவை வெளியிட்டு, `இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். இது குறித்து டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்புகிறேன்' என்று பதிவிட்டார்.

அதேபோல, சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்தச் சம்பவம் தொடர்பாக தங்கள் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகளிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக பா.ஜ.க எம்.பி கெளதம் கம்பீர் கூறியிருக்கிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீஸார் 14 வயது சிறுவன், எட்டுப் பெண்கள் உட்பட 14 பேரைக் கைதுசெய்திருக்கின்றனர்.

இந்த நிலையில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ``பல இந்தியர்கள் பெண்களை மனிதர்களாகக் கருதுவதில்லை. இந்த வெட்கக்கேடான உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். 20 வயதுப் பெண் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்ட வீடியோ இதை அம்பலப்படுத்தியுருக்கிறது" எனப் பதிவிட்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism