Published:Updated:

ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை பாதுகாக்க திரட்டிய ரூ.57 கோடி மோசடி - பாஜக தலைவர் மகனோடு தலைமறைவு?!

மகனுடன் கிரீத் சோமையா

ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை பாதுகாக்க திரட்டிய ரூ.57 கோடியை மோசடி செய்த பாஜக தலைவர் தனது மகனோடு தலைமறைவாகி விட்டார்.

ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை பாதுகாக்க திரட்டிய ரூ.57 கோடி மோசடி - பாஜக தலைவர் மகனோடு தலைமறைவு?!

ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை பாதுகாக்க திரட்டிய ரூ.57 கோடியை மோசடி செய்த பாஜக தலைவர் தனது மகனோடு தலைமறைவாகி விட்டார்.

Published:Updated:
மகனுடன் கிரீத் சோமையா

நாட்டின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல், தனது ஆயுளை முடித்தபோது அதனை உடைக்க கடற்படை முடிவு செய்தது. அதனை மியூசியமாக மாற்றவேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இதற்காக மும்பையில் எம்.பி.யாக இருந்த கிரீத் சோமையா நிதி திரட்டினார். மொத்தம் ரூ.57 கோடியை திரட்டினார். ஆனால் கப்பலை மியூசியமாக மாற்றும் திட்டம் தோல்வி அடைந்தது. 2014-ம் ஆண்டு கப்பல் ஏலம் விடப்பட்டு உடைக்கப்பட்டது. கிரீத் சோமையா இத்திட்டத்திற்காக திரட்டிய ரூ.57 கோடியை மாநில அரசிடம் வழங்கி இருக்கவேண்டும். அதாவது ராஜ்பவனில் ஒப்படைத்திருக்கவேண்டும். ஆனால் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் கிரீத் சோமையா ரூ.57 கோடியை ராஜ்பவனில் கொடுக்கவில்லை என்று தெரிய வந்தது.

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

இது குறித்து சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத் டெல்லியில் அளித்திருந்த பேட்டியில் தெரிவித்திருந்தார். அதோடு மும்பையில் கிரீத் சோமையா மீது டிராம்பே போலீஸ் நிலையத்தில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் புகார் செய்தார்.

இதற்காக கிரீத் சோமையாவின் மகனை இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி போலீஸார் கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர் போலீஸில் ஆஜராகவில்லை. போலீஸார் விசாரணைக்கு ஆஜராகும் படி கூறி கிரீத் சோமையா வீட்டுக்கு சம்மன் கொடுக்க சென்ற போது அவர்களின் வீடு பூட்டியிருந்தது. தந்தையும் மகனும் தலைமறைவாகி இருந்தனர். இது குறித்து சஞ்சய் ராவத் கூறுகையில், ``விசாரணைக்கு ஆஜராகும்படி கிரீத் சோமையா மற்றும் அவரின் மகன் நெயில் ஆகியோரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் அவர்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டனர். தந்தையும் மகனும் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர். தவறு செய்யவில்லையெனில் ஏன் பயப்படவேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார். கிரீத் சோமையாவின் முன்ஜாமீன் மனு திங்கள் கிழமை விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism