Published:Updated:

அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு `சூப்பர் ஸ்பிரெட்டர்' - சர்ச்சையைக் கிளப்பிய பாஜக பிரமுகரின் கருத்து!

கபில் மிஸ்ரா - கெஜ்ரிவால்
News
கபில் மிஸ்ரா - கெஜ்ரிவால்

``டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்குச் சென்று கொரோனா தொற்றைப் பரப்பி, `சூப்பர் ஸ்பிரெட்டர்'-ஆகச் செயல்பட்டுவருகிறார்."

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து, இயல்புநிலை மெல்ல மெல்லத் திரும்பிக்கொண்டிருந்த நிலையில், கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. மேலும், ஒமைக்ரான் வைரஸ் தொற்றுப் பரவலும் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்துவருகிறது.

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தலைநகர் டெல்லியில் புதிதாக 4,099 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. கடந்த சில நாள்களாகவே டெல்லியில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. தொற்று எண்ணிக்கை அதிகரிக்காமல் கட்டுப்படுத்துவதற்காக, மாநில அரசு இரவு ஊரடங்கு போன்ற பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லியின் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், ``பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. லேசான அறிகுறி என்பதால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்கிறேன். என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று டேராடூன் நகரில் நடைபெற்ற நவ்பரிவர்தன் யாத்திரையில் பங்கேற்றார். அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, பா.ஜ.க-வினர் அவரைக் கேலி செய்யும்விதமாக சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டுவருகின்றனர். பா.ஜ.க-வைச் சேர்ந்த கபில் மிஸ்ரா என்பவர், ``டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்குச் சென்று கொரோனா தொற்றைப் பரப்பி, `சூப்பர் ஸ்பிரெட்டர்'-ஆகச் செயல்பட்டுவருகிறார்" எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

இதற்கு முன்பு ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ-வாக இருந்து, தற்போது பா.ஜ.க-வில் இணைந்திருக்கும் கபில் மிஸ்ராவின் கருத்துக்குப் பலரும் தங்கள் கண்டனங்களைப் பதிவுசெய்துவருகின்றனர்.