Published:Updated:

38 வருடங்களுக்குப் பிறகு சியாச்சினில் கண்டெடுக்கப்பட்ட இந்திய ராணுவ வீரரின் உடல்!

இந்திய ராணுவம்

1984-ல் 'ஆபரேஷன் மேக்தூத்'-க்காக உலகின் உயரமான போர்முனைக்குச் சென்ற 20 ராணுவ வீரர்களில் ஒருவர் ஹர்போலா.

38 வருடங்களுக்குப் பிறகு சியாச்சினில் கண்டெடுக்கப்பட்ட இந்திய ராணுவ வீரரின் உடல்!

1984-ல் 'ஆபரேஷன் மேக்தூத்'-க்காக உலகின் உயரமான போர்முனைக்குச் சென்ற 20 ராணுவ வீரர்களில் ஒருவர் ஹர்போலா.

Published:Updated:
இந்திய ராணுவம்

38 வருடங்களுக்கு முன்பு ராணுவப் பணியில் ஈடுபட்டு, பனிச்சரிவில் சிக்கி மாயமான ராணுவ வீரரின் உடல், தற்போது சியாச்சினில் ஒரு பழைய பதுங்குகுழியில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இந்த உடல் 19 குமாவோன் படைப்பிரிவைச் சேர்ந்த சந்திரசேகர் ஹர்போலாவின் உடல் என ராணிக்கேட் சைனிக் குழு மையத்தால் கண்டறியப்பட்டிருக்கிறது.

1984-ல் 'மேக்தூத்' என்னும் ஆபரேஷனுக்காக உலகின் உயரமான போர்முனைக்குச் சென்ற 20 ராணுவ வீரர்களில் ஒருவர் ஹர்போலா.

38 வருடங்களுக்குப் பிறகு சியாச்சினில் கண்டெடுக்கப்பட்ட இந்திய ராணுவ வீரரின் உடல்!

ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்தக் குழு பனிச்சரிவில் சிக்கிக்கொண்டது. இதில் 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருந்தாலும், ஐந்து பேரின் உடல்கள் கிடைக்கவில்லை. இதில் ஹர்போலாவும் ஒருவர். ஹர்போலாவின் மனைவி சாந்தி தேவி தற்போது சரஸ்வதி விஹார் காலனியில் வசித்துவருகிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதற்கிடையே, ஹர்போலாவின் வீட்டுக்கு வந்தடைந்த ஹல்த்வானி துணை ஆட்சியர் மணிஷ் குமாரும், தாசில்தார் சஞ்சய் குமாரும், அவரின் இறுதிச் சடங்குகள் முழு ராணுவ மரியாதையுடன் நடத்தப்படும் என்றனர்.

அவர் பனிச்சரிவில் சிக்கியபோது, அவருக்குத் திருமணமாகி ஒன்பது வருடங்களாகியிருந்தன. அப்போது 28 வயதாக இருந்த சாந்தி தேவியிடம், நான்கு வயதிலும், ஒன்றரை வயதிலும் இரு பெண் குழந்தைகள் இருந்தனர். இப்போது சாந்தி தேவிக்கு 66 வயதாகிறது.

ராணுவ ஹெலிகாப்டர்
ராணுவ ஹெலிகாப்டர்
ட்விட்டர்

விபத்துக்கு முன்பு ஜனவரி 1984-ல் அவர் வீட்டுக்கு வந்தபோது கூடிய விரைவில் திரும்பி வருவதாக சாந்தியிடம் கூறியிருக்கிறார். அவரை நினைத்துப் பெருமைப்படுவதாக சாந்தி கூறுகிறார்.

ஹர்போலாவின் உடலுடன் மற்றொரு வீரரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும், ஆனால் இன்னும் அது யாருடைய என்று அடையாளம் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.