Published:Updated:

`நாங்கள் சாதித்துவிட்டோம் அப்பா!' - விமர்சனத்தை தகர்த்தெறிந்து வெற்றி வாகைசூடிய விலாஸ்ராவ் மகன்கள்

ரித்தேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் `நாங்கள் சாதித்துவிட்டோம் அப்பா' என்று தந்தையின் புகைப்படத்துடன் உருக்கமாகப் பதிவிட்டிருந்தார். அவரின் உருக்கமான பதிவுக்கு ஒரு பின்னணியும் இருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மகாராஷ்டிரா முதல்வர் அரியணையை இரண்டு முறை அலங்கரித்த விலாஸ்ராவ் தேஷ்முக்கின் இரண்டாவது மகன் ரித்தேஷ் தேஷ்முக். பாலிவுட் நடிகர் தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட ரித்தேஷ் தேஷ்முக்கின் சகோதரர்கள் அமித் மற்றும் தீரஜ் இருவரும் நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ-வாகியுள்ளனர். ரித்தேஷின் அண்ணன் அமித் எம்.எல்.ஏ ஆவது மூன்றாவது முறை, தம்பி தீரஜுக்கோ இது முதல்முறை. நேற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, ரித்தேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் `நாங்கள் சாதித்துவிட்டோம் அப்பா' என்று தந்தையின் புகைப்படத்துடன் உருக்கமாகப் பதிவிட்டிருந்தார். அவரின் உருக்கமான பதிவுக்கு ஒரு பின்னணியும் இருக்கிறது.

சகோதரர்கள் உடன் ரித்தேஷ் தேஷ்முக்
சகோதரர்கள் உடன் ரித்தேஷ் தேஷ்முக்

விலாஸ்ராவ் தேஷ்முக் காங்கிரஸ் சார்பில் இரண்டாவது முறையாக முதல்வராக இருந்த தருணம் அது. 2008-ம் ஆண்டு மும்பை தாஜ் ஹோட்டல் தீவிரவாத தாக்குதல் இவரது ஆட்சியின்போதுதான் நடந்தது. அந்தத் தாக்குதலை அடுத்து நிறைய விமர்சனங்களை எதிர்கொண்ட விலாஸ்ராவ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது. அவர் எதிர் கொண்ட விமர்சனங்களில் ஒன்று, பிரபல தெலுங்கு இயக்குநர் ராம்கோபால் வர்மா மும்பை தாக்குதலை மையமாக வைத்து`The Attacks of 26/11' என்ற படத்தை எடுத்தார்.

`தமிழர் vs தமிழர்; 2வது முறை ஜாக்பாட் அடித்த பட்னாவிஸின் நம்பிக்கை!'- மகாராஷ்டிரா தேர்தல் சுவாரஸ்யம்

இந்தப் படத்துக்காகத் தாக்குதல் நடந்த ஹோட்டலை ராம் கோபால் வர்மா பார்ப்பதற்கு விலாஸ்ராவ் ஏற்பாடு செய்துகொடுத்தார் என்றும், அதற்குப் பதிலாக ரித்தேஷை அந்தப் படத்தில் நடிக்க பேசப்பட்டது என்றும் பா.ஜ.க தரப்பில் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. விலாஸ்ராவ் இறந்த பிறகு, தற்போது இந்தக் குற்றச்சாட்டை தெரிவித்த பா.ஜ.க, மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் அமித் மற்றும் தீரஜூக்கு எதிராக பிரசாரமாக முன்வைத்து பேசிவந்தது. இதில் ஒருபடி மேலே சென்ற மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பிரசாரத்தின்போது செய்தியாளர்கள் சந்திப்பில் இந்தச் சம்பவம் குறித்து அடிக்கடி பேசிவந்தார். ``முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் மும்பை தாக்குதல் சமயத்தில் மகனுக்கு சினிமா சான்ஸ் பெறுவதிலேயே கவனம் செலுத்தினார்" எனப் பகிரங்கமாகக் கூறினார்.

தந்தை விலாஸ்ராவ் உடன் ரித்தேஷ் தேஷ்முக்
தந்தை விலாஸ்ராவ் உடன் ரித்தேஷ் தேஷ்முக்

ஆனால், அப்போதே இதை மறுத்தார் ரித்தேஷ். ``எந்த ஒரு தயாரிப்பாளரிடமோ, இயக்குநரிடமோ எனக்காக என் தந்தை வாய்ப்பு கேட்டது இல்லை. அதற்காக நான் பெருமைப்படுகிறேன். முதல்வர் என்ற முறையில் அவரை கேள்வி கேட்க எல்லா உரிமையும் இருக்கிறது. ஆனால், இல்லாத ஒருவர் குறித்து குற்றம் சாட்டுவது தவறு. ஏழு வருடங்களுக்கு முன்னாள் நீங்கள் இதைக் கூறியிருந்தால் என் தந்தை தக்க பதிலளிதந்திருப்பார்" என விளக்கம் கொடுத்தார். எனினும் தொடர்ந்து பா.ஜ.க சார்பில் அவரின் சகோதரர்கள் போட்டியிடும் தொகுதியில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து பிரசாரம் செய்துவந்தனர். ஆனால், அவர்களின் பிரசாரம் கைகொடுக்கவில்லை. லத்தூர் சிட்டி, புறநகர் தொகுதிகளில் போட்டியிட்ட தேஷ்முக் சகோதரர்கள் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடவே இந்த உருக்கமான பதிவை பதிவிட்டுள்ளார் ரித்தேஷ்.

`மோடி அலையிலும் சிக்காத வர்ஷா!' - காங்கிரஸின் கோட்டையைத் தக்கவைத்த `தாராவியின் ராஜமாதா'
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு