Published:Updated:

மிரட்டிப் பணம் பறித்த வழக்கு... டெல்லி போலீஸ் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட நடிகை நோரா ஃபதேஹி!

நடிகை நோரா

சுகேஷ் சந்திரசேகர் மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹிக்குத் தொடர்பு இல்லை என்று டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மிரட்டிப் பணம் பறித்த வழக்கு... டெல்லி போலீஸ் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட நடிகை நோரா ஃபதேஹி!

சுகேஷ் சந்திரசேகர் மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹிக்குத் தொடர்பு இல்லை என்று டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Published:Updated:
நடிகை நோரா

டெல்லியைச் சேர்ந்த மருந்து கம்பெனி உரிமையாளரின் மனைவியை மிரட்டி ரூ.215 கோடி வாங்கியது தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகரிடம் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா ஃபதேஹி ஆகியோர் பணம் மற்றும் பரிசுப்பொருள்கள் வாங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு ஏற்கெனவே இருவரிடமும் பல முறை விசாரணை நடத்தியுள்ள நிலையில், டெல்லி போலீஸாரும் இது குறித்து இரண்டு பேரிடமும் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், நோராவுக்கு இந்தக் குற்றத்தில் தொடர்பு இல்லை என்று போலீஸார் தெரிவித்துவிட்டதாக நோராவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக டெல்லி போலீஸார் கூறியதாக நோராவுக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், ``சுகேஷ் சந்திரசேகருடன் சேர்ந்து நோரா எந்தவிதச் சதியிலும் ஈடுபடவில்லை. சுகேஷ் குற்றங்கள் குறித்து நோராவுக்குத் தெரிந்திருக்கவில்லை. சுகேஷ் என்ன செய்கிறான் என்பதை நோரா தெரிந்திருக்கவில்லை. அதோடு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துவருகிறார். சுகேஷ் சந்திரசேகரின் செயல்பாட்டில் சந்தேகம் வந்தவுடன் எங்களைத் தொடர்புகொண்டு தெரிவித்தார்.

மிரட்டிப் பணம் பறித்த வழக்கு... டெல்லி போலீஸ் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட நடிகை நோரா ஃபதேஹி!

அதன் அடிப்படையில் விசாரித்துவருகிறோம். இன்னும் விசாரணை முடியவில்லை. அனைத்து வாக்குமூலங்கள், சாட்சிங்கள் மற்றும் சந்தர்ப்பங்களை கவனத்தில்கொண்டு இதில் இறுதி முடிவுக்கு வரப்படும். சுகேஷ் மனைவிக்கு சென்னையில் ஒரு ஸ்டூடியோ இருக்கிறது. அந்த ஸ்டூடியோ நிகழ்ச்சிக்கு வரும்படி நோராவுக்கு சுகேஷ் அழைப்பு விடுத்துள்ளார். இதில் பங்கேற்கப் பணமாக பெற்றுக்கொள்ள வேண்டாம் என்றும், பரிசாக கார் தருகிறோம் என்று சுகேஷ் தெரிவித்திருக்கிறார். காரை நோராவின் மைத்துனர் பெற்றுக்கொண்டிருக்கிறார். சுகேஷுடன் நோரா பகிர்ந்துகொண்ட சாட்டிங் விவரங்களை எங்களுடம் கொடுத்திருக்கிறார். கார் பெற்றதை நோராவின் மைத்துனர் உறுதிபடுத்தியிருக்கிறார்” என்றார்கள். இந்த வழக்கிலிருந்து நோராவை விடுவித்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இப்போது ஜாக்குலின் பெர்னாண்டஸ் மட்டும் மாட்டிக்கொண்டிருக்கிறார். அவரின் பெயர் அமலாக்கப் பிரிவின் குற்றப்பத்திரிகையிலும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.