Published:Updated:

``கொரோனா பாசிட்டிவ்; இனியும் தடுப்பூசி போடமாட்டேன்!" - அடம்பிடிக்கும் பாலிவுட் நடிகை

``இன்னும் இரண்டு நாள்களில் நாங்கள் குணமடைவோம். மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த எனக்கு சிறந்த ஓய்வாக இந்த நாள்கள் அமையும். கடவுள் நான் அமைதியாக ஓய்வெடுக்க வழி செய்துள்ளார்" - பூஜா பேடி

``தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருக்க முடிவு செய்துள்ளேன்" எனக் கூறிய மும்பையைச் சேர்ந்த பாலிவுட் நடிகை பூஜா பேடி தற்போது கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகையும் தொலைக்காட்சி நட்சத்திரமுமான பூஜா பேடி தற்போது கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இவர் இந்தி `பிக்பாஸ்' நிகழ்ச்சி மற்றும் சில பாலிவுட் படங்கள் மூலம் பிரபலமானவர். தொழிலதிபர் மானேக்கை திருமணம் செய்யவிருக்கும் பூஜா, மானேக் மற்றும் அவர் வீட்டு உதவியாளர்களும் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார். கொரோனா பரவல் தொடங்கி தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது முதலே தடுப்பூசிக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து வந்தார் பூஜா. அதற்காகக் கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டார்.

COVID-19 vaccine
COVID-19 vaccine
AP Photo / Bikas Das
கொரோனா காலத்தில் அதிகரித்த பதின்பருவ கர்ப்பங்கள்; இந்திய சிறுமிகளின் துயரநிலை மாறுமா?

கடந்த ஞாயிறு அன்று இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்ட பூஜா அதில், ``எனக்கு கோவிட் தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. இருந்தாலும் நான் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருக்க முடிவு செய்துள்ளேன். அதற்கு மாறாக வேறு வழிகளில் என்னைக் காத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன். எனது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறேன். நீங்களும் உங்கள் ஒவ்வொருவருக்கும் எது சரி எனப்படுகிறதோ அதைச் செய்யுங்கள். எச்சரிக்கையாக இருங்கள், அஞ்ச வேண்டாம்" எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும் தான் விரைவில் குணமடைவேன் என நம்புவதாய் கூறும் அவர், ``நாங்கள் வலிமையுடன் மீள நம்பிக்கையுடன் கவனம் செலுத்தி வருகிறோம். இன்னும் இரண்டு நாள்களில் நாங்கள் குணமடைவோம். மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த எனக்கு சிறந்த ஓய்வாக இந்த நாள்கள் அமையும்.

Pooja Bedi
Pooja Bedi
Instagram Photo: / @Poojabediofficial

கடவுள் நான் அமைதியாக ஓய்வெடுக்க வழி செய்துள்ளார்" என வீடியோவில் கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் லாக்டௌன் மற்றும் முகக்கவசம் அணிவது அர்த்தமற்றது எனக் கூறிய பூஜா, கோவாவில் படகு சவாரி செய்யும் வீடியோவை பதிவிட்டிருந்தார். கொரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்த அந்நேரத்தில், பலராலும் கடுமையாக விமர்சிக்கவும் எச்சரிக்கவும் பட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் தடுப்பூசிக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்தார் பூஜா. தடுப்பூசி போடுவதனை `தீங்கு மற்றும் நியாயமற்றது' என்றார்.

மிதமான காற்றில் வேகமாகப் பரவுமா கொரோனா வைரஸ்? ஐஐடி ஆய்வும் விளக்கமும்

கோவிட் தொற்று ஏற்படுபவர்களில் 90% பேர் உயிர்பிழைத்திட முடியும் எனில், இணை நோய் இருப்பவர்கள் மற்றும் எளிதாகப் பாதிக்கப்படக் கூடியவர்களை தனிமைப் படுத்துவதற்கும், தடுப்பூசி போடுவதற்குமான நடவடிக்கைகளைத்தான் எடுக்க வேண்டுமே தவிர, மொத்த உலகும் தடுப்பூசி போட வேண்டும் என வற்புறுத்தக் கூடாது. முக்கியமாக தடுப்பூசி போடாதவர்களை சிறுமைப்படுத்தக் கூடாது" என அவர் கூறியிருந்தார்.

தடுப்பூசியை விட நம்பிக்கை பெரிது என நம்பும் தான் மீண்டு வர, தன் ரசிகர்கள் தனக்குப் பக்கபலமாக இருப்பதாக வீடியோவில் கூறியிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு