Election bannerElection banner
Published:Updated:

டெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு! - நொறுங்கிய கார் கண்ணாடிகள்

குண்டு வெடிப்பு நடந்த இடம்
குண்டு வெடிப்பு நடந்த இடம் ( ANI )

இன்று மாலை டெல்லியிலுள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு நடந்திருக்கிறது.

தலைநகர் டெல்லி, இந்தியா கேட் பகுதியின் அருகேயுள்ள டாக்டர் அப்துல் கலாம் சாலையில் இஸ்ரேல் நாட்டின் தூதரகம் செயல்பட்டுவருகிறது. இன்று மாலை இந்தத் தூதரகதுக்கு அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நடந்திருக்கிறது. குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, அந்தப் பகுதி முழுவதும் காவலர்கள் குவிக்கப்பட்டு, தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மிகவும் பாதுகாப்பான இந்தப் பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவம் பதற்றமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.

குறைந்த திறன்கொண்ட குண்டு வெடித்ததால், பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியிருக்கிறது. குண்டு வெடிப்பால், அங்கு நிறுத்தப்பட்ட வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்திருந்தன. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தற்காலிகமாக அந்தச் சாலை முழுவதும் மூடப்பட்டு, உளவுத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல துறை அதிகாரிகள் அந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு