Published:Updated:

இந்திய வான் எல்லையில் பறந்த இரான் நாட்டு விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! - பரபரத்த அதிகாரிகள்

விமானம்

இந்திய வான் எல்லையில் பறந்த இரான் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்திய வான் எல்லையில் பறந்த இரான் நாட்டு விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! - பரபரத்த அதிகாரிகள்

இந்திய வான் எல்லையில் பறந்த இரான் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Published:Updated:
விமானம்

இரான் தலைநகர் தெக்ரானிலிருந்து சீனாவுக்கு இன்று காலை பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. அந்த விமானம் இந்திய வான் எல்லையில் பறந்து கொண்டிருந்தபோது, அந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக காலை 9:30 மணியளவில் மிரட்டல் வந்தது. இதையடுத்து அந்த விமானத்தை டெல்லியில் தரையிறக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால் தொழில்நுட்ப பிரச்னை காரணமாக விமானம் தரை இறங்க அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதே போல, விமானம் ஜெய்ப்பூரில் தரையிறங்கவும் அனுமதி கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து அனைத்து விமான நிலையங்களுக்கும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டது.

வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு மிரட்டல்
சித்திரிப்புப் படம்

இந்திய விமானபடையைச் சேர்ந்த விமானங்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்ட விமானத்தைக் கண்காணித்தன. மேலும் இரான் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து விமானப்படை விளக்கம் அளித்திருக்கிறது. விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானங்கள் பாதுகாப்பான தொலைவில் அந்த விமானத்தை பின் தொடர்ந்தன. இரான் விமானம் இந்திய எல்லையை கடந்து செல்லும் வரை உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இரான் விமானம் ஜெய்ப்பூர் உள்ளிட்ட சில விமான நிலையங்களில் தரையிறங்க பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் விமானி மறுத்துவிட்டார்.

இரான் நாட்டு விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.