Published:Updated:

தாமதமாக வந்ததால் மாப்பிள்ளையை மாற்றிய பெண்வீட்டார்... திருமணத்தில் நடந்த ட்விஸ்ட்!

இதை முற்றிலும் மறுத்த மாப்பிள்ளை வீட்டினர், மணப்பெண்ணுக்காகக் கொண்டுவரப்பட்ட நகைகள் அனைத்தையும் பறித்துவிட்டதாகவும், தங்களை ஓர் அறைக்குள் தள்ளி அடித்து துன்புறுத்தியதாகவும் பதிலளித்துள்ளனர்.

representational image
representational image

முக்கோணக் காதல் கதைகளில் இறுதியில் யாருடன் யார் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பைக் கொடுத்துவிட்டு, திருமண மேடையில் ட்விஸ்ட் கொடுக்கும் ஏகப்பட்ட திரைப்படங்களைப் பார்த்திருப்போம். ஆனால், திருமணத்துக்குத் தாமதமாக வந்ததால் மாப்பிள்ளையையே மாற்றி உண்மையாகவே ட்விஸ்ட் கொடுத்திருக்கிறது உத்தரப்பிரதேசத்தில் நடந்த திருமண நிகழ்வு ஒன்று.

representational image
representational image

உறவினர்களின் வருகை, நண்பர்களின் நடனம், பூக்களால் தோரணை என்று அழகாகத் தயாராகிக்கொண்டிருந்தது உத்தரப்பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்திலுள்ள நங்கல்ஜத் கிராமம். ஆனால், திருமண நிகழ்விடத்தை அடைந்த மாப்பிள்ளை வீட்டாருக்கோ பேரதிர்ச்சி காத்திருந்தது. திருமணத்துக்குத் தாமதமாக வந்ததால் மாப்பிள்ளை வீட்டினரை ஓர் அறையில் அடைத்து வைத்து, அதே மேடையில் மணப்பெண்ணுக்கு வேறொருவரை மணமுடித்துள்ளனர் பெண்வீட்டார்.

இதுகுறித்து உத்தரப்பிரதேச காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ``ஏற்கெனவே இந்த மணப்பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் ஆறு வாரங்களுக்கு முன்பு ஒரே மேடையில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடைபெற்ற 'பொது திருமணத்தில்' மணம் முடித்ததாகவும், முறையான சடங்குகள் பின்பற்றப்படாததால், மாப்பிள்ளை வீட்டுக்கு மணப்பெண் செல்லவில்லை' என்றும் கூறியுள்ளனர்.

representational image
representational image
Pixabay

மேலும், ஊர் மக்களை அழைத்து, உறவினர்களின் முன்னிலையில் முறையான சடங்குகளைச் செய்து திருமணம் செய்து முடிக்க ஏற்பாடு செய்யப்பட்ட நேரத்தில், மாப்பிள்ளை வீட்டார் அதிகப்படியான பணம் மற்றும் இருசக்கர வாகனம் ஒன்றையும் வரதட்சணையாகக் கேட்கிறார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

இதை முற்றிலும் மறுத்த மாப்பிள்ளை வீட்டினர், மணப்பெண்ணுக்காகக் கொண்டுவரப்பட்ட நகைகள் அனைத்தையும் பறித்துவிட்டதாகவும், தங்களை ஓர் அறைக்குள் தள்ளி அடித்து துன்புறுத்தியதாகவும் பதிலளித்துள்ளனர்.

representational image
representational image
Pixabay
`எனக்கு எந்த வருத்தமும் இல்லை!' - காதல் முறிவு பற்றி மனம் திறந்த ஸ்ருதிஹாசன்

``இரு குடும்பங்களும் காவல்துறையை அணுகி குற்றச்சாட்டுகளையும் எதிர் குற்றச்சாட்டுகளையும் முன் வைத்தனர். தற்போது இருவரும் சமரச முடிவுக்கு வந்திருக்கின்றனர். மணமகள் மணமகனுடன் செல்ல விரும்பவில்லை. மேலும், அவர் அந்த இடத்தைச் சேர்ந்த வேறொருவரைத் திருமணமும் செய்துகொண்டார்" என்று இந்த வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் கந்தா பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.