Published:Updated:

மீண்டும் ட்விட்டருக்கு திரும்பிய ராணுவ வீரர் லிட்டரின் மகள் ஆஷ்னா - வெளியேறியதற்குக் காரணம் இதுதான்!

ஆஷ்னா லிட்டர்
News
ஆஷ்னா லிட்டர்

மறைந்த முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் முன்னுரை எழுதி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான லிட்டர் மகள் ஆஷ்னாவின் "இன் சர்ச் ஆஃப் எ டைட்டில்" புத்தகம் தொடர்பாக சமூக வலைதளங்களில் சர்ச்சை கிளம்பியது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே யாரும் எதிர்பாராத விதமாக முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவர் மனைவி உட்பட மொத்தம் 14 ராணுவ வீரர்கள் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. அதில், அனைவருமே உயிரிழந்தனர். இந்த கோர விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கிப் போட்டுவிட்டது. விபத்தில் உயிரிழந்த 14 பேரில், சிடிஎஸ் (CDS)-ன் பாதுகாப்பு உதவியாளராக இருந்த பிரிகேடியர் லக்விந்தர் சிங் லிட்டரும் அடக்கம். பிரிகேடியர் லக்விந்தர் சிங் லிட்டரின் இறுதிச்சடங்கின் போது அவரின் மகள் ஆஷ்னா பேசுகையில், ``என் தந்தை என்னுடன் 17 வருடங்கள் இருந்தார். மகிழ்ச்சியான நினைவுகளுடன் வாழ்க்கையில் முன்னேறுவேன். என் தந்தையின் மரணம் தேசிய இழப்பு. ஒருவேளை அது விதிக்கப்பட்டிருக்கலாம். சிறந்த விஷயங்கள் நம் வாழ்வில் வரும். அவர் எனக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக இருந்தார். அவர் ஒரு ஹீரோ. என்னுடைய சிறந்த நண்பர். அனைவரையும் ஊக்குவிக்கும் குணம் கொண்டவர் அவர்” என்றார் நெகிழ்ச்சியாக ஊடகங்களிடம் பேசினார். ஆஷ்னா லிட்டரின் துணிச்சல் அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது.

ஆஷ்னா லிட்டர்
ஆஷ்னா லிட்டர்

இந்த நிலையில், மறைந்த முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் முன்னுரை எழுதி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான லிட்டர் மகள் ஆஷ்னாவின் "இன் சர்ச் ஆஃப் எ டைட்டில்" புத்தகம் தொடர்பாக சமூக வலைதளங்களில் சர்ச்சை கிளம்பியது. சிலர் ஆஷ்னாவின் அரசியல் சித்தாந்தம் தொடர்பாக அவரை ட்விட்டரில் கடுமையாக விமர்சித்தனர். அதனால், ஆஷ்னா அவர் தந்தையின் இறுதிச்சடங்கு நாளில் தனது ட்விட்டர் கணக்கை (De-activate) செயலிழக்கச் செய்தார். சிவ சேனாவின் பிரியங்கா சதுர்தேவி, காங்கிரஸின் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் ஆஷ்னாவுக்கு ஆதரவாகக் கருத்துகளைப் பதிவிட்டனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த நிலையில், ஆஷ்னா லிட்டர் நேற்று (சனிக்கிழமை) மீண்டும் டிவிட்டருக்குத் திரும்பினார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், ``என் தந்தையின் இறப்புக்குத் துக்கத்திலிருக்கும் தேசத்துக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். என் தந்தையின் மறைவு எனக்கான இழப்பு மட்டுமல்ல, நமக்கான இழப்பு. என் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடவும், கவனம் சிதறாமல் இருக்கவும் தான் என்னுடைய ட்விட்டர் கணக்கைச் செயலிழக்கச் செய்தேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆஷ்னா மீண்டும் ட்விட்டருக்குத் திரும்பியிருப்பதற்கு, இணையவாசிகள் ஆதரவு தெரிவித்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். ஆஷ்னாவின் ட்விட்டர் பதிவுக்கு ரிப்ளை செய்த சிவ சேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதி, ``உங்களின் மன வலிமைக்கும், தைரியத்துக்கும் வாழ்த்துகள்! உங்களை மீண்டும் ட்விட்டரில் பார்ப்பதில் மகிழ்ச்சி..!" என்று குறிப்பிட்டிருக்கிறார்.