Published:Updated:

`18 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி போடாமல் பள்ளிகளைத் திறக்கமுடியாது!' - எடியூரப்பா

எடியூரப்பா
எடியூரப்பா

கர்நாடக அரசுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர் குழு பள்ளிகளை மீண்டும் திறக்க பரிந்துரைத்த நிலையில், கர்நாடக முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

18 வயதிற்குட்பட்டவர்களுக்குத் தடுப்பூசிகள் போடப்படாமல் பள்ளிகளை மீண்டும் திறக்க முடியாது என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடக அரசுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர் குழு பள்ளிகளை மீண்டும் திறக்க பரிந்துரைத்த நிலையில், கர்நாடக முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

வரவிருக்கும் கொரோனா பெருந்தொற்று பரவலின் மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக, கர்நாடக அரசால் அமைக்கப்பட்டுள்ள இருதய அறுவை சிகிச்சை நிபுணர் தேவி பிரசாத் ஷெட்டி தலைமையிலான 13 உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது.

பள்ளிகள்
பள்ளிகள்
கோவிட் மூன்றாவது அலை... எப்போது வரும், எப்படி வரும்? பதில் சொல்கிறார் நிபுணர்...

அக்குழு சமர்ப்பித்த 92 பக்க இடைக்கால அறிக்கையைப் பெற்ற கர்நாடக முதலமைச்சர் பி எஸ் எடியூரப்பா, செய்தியாளர்களிடம், ``பள்ளிகள் திறப்பது குறித்து அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. 18 வயதிற்குக் குறைவானவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து சோதனைகள் மேற்கொண்டு வரும் சூழலில், தடுப்பூசி செலுத்தாமல் பள்ளிகளை திறப்பது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. தற்போதைய சூழலில் எந்த மாநில அரசும் பள்ளி, கல்லூரிகளைத் திறப்பது குறித்து முடிவெடுக்க முடியாது" என்றார்.

மேலும் மாநிலத்தில் முதல் கட்டமாக உயர் கல்வி நிறுவனங்களை திறக்க உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளாக ஆசிரியர்கள் மற்றும் 18 வயதை தாண்டிய மாணவர்களுக்குத் தடுப்பூசி போடுவதை துரிதப்படுத்த உள்ளதாகவும் கூறினார்.

School Students
School Students
Photo: Vikatan / Balasubramanian.C
மூன்றாவது அலை... குழந்தைகளுக்கு பாதிப்பா?

தேவி ஷெட்டி தலைமையிலான நிபுணர் குழு, மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மீண்டும் திறக்க பரிந்துரைத்தது. பள்ளி திறப்பதில் உள்ள தாமதம் குழந்தைகளை ஊட்டச்சத்துக் குறைபாடு, குழந்தைத் தொழிலாளர், குழந்தைத் திருமணம், குழந்தை கடத்தல், பிச்சை போன்றவற்றுக்குத் தள்ளக்கூடும் என்று நிபுணர் குழு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், குழந்தைகளுக்கான மருத்துவ சிகிச்சையை அதிகரிப்பதை மையமாகக் கொண்டு மாநிலத்தில் அதற்கான வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு