Published:Updated:

BSNL: நவம்பரில் 4ஜி; அடுத்தாண்டு சுதந்திர தினத்தில் 5ஜி - பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அறிவிப்பு!

பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனம்,

அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனம், இந்தியாவில் 4ஜி மற்றும் 5ஜி சேவையை பயனாளர்களுக்கு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

BSNL: நவம்பரில் 4ஜி; அடுத்தாண்டு சுதந்திர தினத்தில் 5ஜி - பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அறிவிப்பு!

அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனம், இந்தியாவில் 4ஜி மற்றும் 5ஜி சேவையை பயனாளர்களுக்கு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Published:Updated:
பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனம்,

இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் மோடி கடந்த 1ம் தேதி தொடங்கி வைத்தார். 5ஜி சேவைக்கான ஏலம் எடுத்த ஜியோ, ஏர்டெல் ஆகிய இரண்டு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு 5ஜி சேவையைத் தொடங்கியுள்ளனர். முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை மும்பை, கொல்கத்தா, டெல்லி மற்றும் வாரணாசி ஆகிய நான்கு நகரங்களில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. அதேபோல் சென்னை உள்பட 8 நகரங்களில் ஏர்டெல் நிறுவனம் தங்களது 5ஜி சேவையைத் தொடங்கியுள்ளது. இதுபோன்ற தனியார் நிறுவனங்கள், 5ஜி சேவையை வழக்குவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வரும் நிலையில்,

பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனம்
பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனம்

தற்போது அரசு டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் 4ஜி சேவையை அறிமுகம் செய்வதற்கான பணியைத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் வரும் நவம்பர் முதல் 4ஜி நெட்வொர்க் சேவையை பயனாளர்களுக்கு வழங்கவுள்ளதாகவும், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் 5ஜி சேவையை வழங்கவுள்ளதாகவும் பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. டிசிஎஸ் மற்றும் டெலி மேட்டிக்ஸ் மேம்பாட்டு மையத்துடன் இணைந்து இதற்கான பணிகளை பிஎஸ்என்எல் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. 4ஜி சேவை மூலம் பிஎஸ்என்எல் வருவாயில் ஏற்றம் இருக்கும் என அந்நிறுவனத்தின் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக மேலாளருமான பிரவீன் குமார் தெரிவித்திருக்கிறார்.