Published:Updated:

`போராட்டத்தில் புல்லட் வெஸ்டை துளைத்த குண்டு’ - பர்ஸ்ஸால் மறுபிறவி எடுத்த உ.பி காவலர்!

உத்தரப்பிரதேசத்தில் சனிக்கிழமையன்று நடந்த போராட்டத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

காவலர்
காவலர்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தும் பணியைக் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். போலீஸ் கான்ஸ்டபிள் விஜேந்திர குமார் என்பவர் உத்தரப்பிரதேசத்தின் நால்பந்த் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். போராட்டக்காரர்கள் வன்முறையை ஈடுபட்டதையடுத்து காவலர்கள் தடியடி நடத்திக் கலைத்தனர். அப்போது போலீஸ் கான்ஸ்டபிள் விஜேந்திர குமாரின் புல்லட் வெஸ்டை ஒரு புல்லட் துளைத்தது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்தப்பினார்.

போராட்டம்
போராட்டம்

``இது என்னுடைய மறுபிறவி என்றுதான் கூற வேண்டும். நால்பந்த் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது திடீரென போராட்டக்காரர்கள் எங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒரு புல்லட் என்னுடைய புல்லட் வெஸ்டை துளைத்தது. என்னுடைய பாக்கெட்டில் நான் வைத்திருந்த பர்ஸ்தான் என்னுடைய உயிரைக் காப்பாற்றியது. அதில் 4 ஏடிஎம் கார்டுகள், சிவன், சாய்பாபா படங்கள் இருந்தன” என விஜேந்திர குமார் கூறினார்.

`மருந்து வாங்க நான்தான் அனுப்பினேன்!’- உ.பியில் கதறிய ஆட்டோ ஓட்டுநரின் மனைவி

`உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருக்கிறது. மாநிலத்தின் பதற்றமான பகுதிகளில் போலீஸ் படைகள் குவிக்கப்பட்டிருக்கிறது. காவல்துறையினர் மக்களின் நலனில் அக்கறை கொண்டு பணியாற்றி வருகின்றனர். வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட 705 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 4,500 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 263 போலீஸார் காயமடைந்துள்ளனர்.

போராட்டம்
போராட்டம்

இதில் 57 காவலர்களுக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன. போராட்டம் நடந்த இடத்திலிருந்து சட்டவிரோதமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. நாட்டுத்துப்பாக்கிகள், 405 புல்லட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன’ என அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

`எதுவும் பேச விரும்பவில்லை, கையை இழந்துவிட்டேன்!' - போலீஸ் தாக்குதலால் அலறிய உ.பி மாணவர்கள்