Published:Updated:

அனில் அம்பானியின் கனவு வீட்டை திவாலாகாமல் காப்பாற்றிய அண்ணன் முகேஷ்... என்ன நடந்தது?!

முகேஷ் அம்பானி - அனில் அம்பானி

பிரமல் குரூப் திடீரென அனில் அம்பானியின் சொத்தை விற்பனை செய்வதில் பின் வாங்கியிருப்பதற்கு தொழிலதிபர் முகேஷ் அம்பானிதான் காரணம் என்று கூறப்படுகிறது.

அனில் அம்பானியின் கனவு வீட்டை திவாலாகாமல் காப்பாற்றிய அண்ணன் முகேஷ்... என்ன நடந்தது?!

பிரமல் குரூப் திடீரென அனில் அம்பானியின் சொத்தை விற்பனை செய்வதில் பின் வாங்கியிருப்பதற்கு தொழிலதிபர் முகேஷ் அம்பானிதான் காரணம் என்று கூறப்படுகிறது.

Published:Updated:
முகேஷ் அம்பானி - அனில் அம்பானி

தொழிலதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமான அனைத்து தொழில்களும் திவாலாகிவிட்டன. முதலில் ரிலையன்ஸ் மொபைல் அனில் அம்பானியின் கையை விட்டுப்போனது. அதன் பிறகு அவர் செய்துவந்த அனைத்து தொழில்களும் கையை விட்டுப்போய்விட்டன. தற்போது ஓரிரு தொழில்கள் மட்டுமே அவரிடம் இருக்கிறது. அனில் அம்பானி மிகவும் செல்வாக்குடன் இருந்த காலத்தில் மும்பை பாந்த்ரா பாலி ஹில் பகுதியில் தனக்கான கனவு இல்லத்தைக் கட்ட ஆரம்பித்தார். ஒன்றரை ஏக்கரில் மிகவும் பிரமாண்டமாக கட்ட ஆரம்பித்தார். இதற்காக 500 கோடி ரூபாய் கடன் வாங்கினார் அனில் அம்பானி. வீடு கட்டிக்கொண்டிருந்தபோதே அனில் அம்பானியின் தொழில்களும் படிப்படியாக சரிய ஆரம்பித்தன. இதனால் கட்டுமானப்பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

அனில் அம்பானி
அனில் அம்பானி

கடந்த 10 ஆண்டுகளாக பாதி கட்டி முடிக்கப்பட்ட நிலையில் அந்தக் கட்டடம் அப்படியே நிற்கிறது. இதைக் கட்டுவதற்கு கடன் கொடுத்த டி.ஹெச்.எஃப்.எல் நிறுவனம் நலிவடைந்ததால் அந்த நிறுவனத்தை பிரமல் கேபிட்டல் நிறுவனம் வாங்கியிருக்கிறது. இதையடுத்து பிரமல் நிறுவனம் கடனுக்காக அனில் அம்பானியின் கட்டி முடிக்கப்படாத வீட்டை நிலத்தோடு சேர்த்து விற்பனை செய்வதற்கான வேலையில் ஈடுபட்டிருந்தது. மும்பையில் முக்கிய பில்டர்கள் அதை வாங்க ஆர்வம்காட்டிவந்தனர். அனில் அம்பானியும் அதை ரூ.800 கோடிக்கு விற்பனை செய்யமுயன்றார். ஆனால் முடியாமல் போய்விட்டது. பாந்த்ராவின் மிகவும் முக்கியமான பாலி ஹில் பகுதியில் இருக்கும் இந்த சொத்தை வாங்க பில்டர்கள் அதிக ஆர்வம்காட்டிவந்தனர்.

இந்த நிலையில், புதிய திருப்பமாக இந்த சொத்தை விற்பனை பட்டியலிலிருந்து பிரமல் நிறுவனம் நீக்கியிருக்கிறது. இந்தப் பிரச்னை தொடர்பான வழக்கு தேசிய கம்பெனிகள் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தபோது இரு தரப்பினரும் பேசித்தீர்த்துக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இதில் இறுதி முடிவெடுக்க இரு தரப்பினருக்கும் தீர்ப்பாயம் 6 வாரக்காலம் அவகாசம் கொடுத்து உத்தரவிட்டது. அடுத்த விசாரணைக்குள் இதில் தீர்வு காணப்படவேண்டும் என்று தீர்ப்பாயம் கேட்டுக்கொண்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தப்பியது எப்படி?

பிரமல் குரூப் திடீரென அனில் அம்பானியின் சொத்தை விற்பனை செய்வதில் பின் வாங்கியிருப்பதற்கு தொழிலதிபர் முகேஷ் அம்பானிதான் காரணம் என்று கூறப்படுகிறது. முகேஷ் அம்பானியின் மகள் ஈஷாவை பிரமல் குரூப் தலைவர் அஜய் பிரமல் மகன் ஆனந்த் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். இந்தத் திருமணம்தான் அனில் அம்பானியின் கட்டி முடிக்கப்படாத வீடு விற்பனையாவதிலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கிறது என்கிறார்கள். முகேஷ் அம்பானி சொல்லித்தான் அஜய் பிரமல் இந்தக் காரியத்தை செய்திருக்கவேண்டும் என்று கூறப்படுகிறது. முகேஷ் அம்பானி இதற்கு முன்பும் பல சந்தர்ப்பங்களில் அனில் அம்பானிக்கு கஷ்டமான நேரத்தில் பண உதவி செய்திருக்கிறார்.

அனில் அம்பானி, முகேஷ் அம்பானி
அனில் அம்பானி, முகேஷ் அம்பானி

அம்பானி சகோதரர்கள் சொத்தை பிரித்துக்கொண்டபோது அதிக வருவாய் உள்ள பெட்ரோலிய உற்பத்தி பிரிவான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பெட்ரோகெமிக்கல் தயாரிப்பு தொடர்பான வர்த்தகத்தை முகேஷ் அம்பானி தனக்கு வைத்துக்கொண்டு எஞ்சிய தொழில்களை அனில் அம்பானிக்கு கொடுத்தார். ஆனால் ஜி.டி.எம்.ஏ தொழில் நுட்பத்திலான மொபைல் போனுக்கு மக்கள் மத்தியில் இருந்த மோகம் குறைந்ததால் மொபைல் பிஸ்னஸ்க்காக வாங்கியக் கடனை அடைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பிறகு கடனை அடைக்க ஒவ்வொரு கம்பெனியாக விற்பனைக்கு வந்தது. அனில் அம்பானியின் பெரும்பாலான கம்பெனிகள் வாங்கியக் கடனை திரும்ப செலுத்ததால் கடன் கொடுத்த நிறுவனங்களே தேசிய கம்பெனிகள் தீர்ப்பாயம் மூலம் அவற்றை தங்கள் வசம் எடுத்துக்கொண்டன.