Published:Updated:

மும்பை ஐஐடி: பைப் வழியாக ஏறி குளியல் அறையில் வீடியோ எடுத்த கேன்டீன் ஊழியர்! - அதிர்ச்சியடைந்த மாணவி

மும்பை ஐஐடி

மும்பை ஐஐடியில் பைப் வழியாக ஏறி பாத்ரூமில் குளித்த மாணவியை வீடியோ எடுத்த கேன்டீன் ஊழியர் கைது செய்யப்பட்டார்.

மும்பை ஐஐடி: பைப் வழியாக ஏறி குளியல் அறையில் வீடியோ எடுத்த கேன்டீன் ஊழியர்! - அதிர்ச்சியடைந்த மாணவி

மும்பை ஐஐடியில் பைப் வழியாக ஏறி பாத்ரூமில் குளித்த மாணவியை வீடியோ எடுத்த கேன்டீன் ஊழியர் கைது செய்யப்பட்டார்.

Published:Updated:
மும்பை ஐஐடி

மும்பை ஐஐடி, பவாய் என்ற இடத்தில் இருக்கிறது. இங்கு நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கண்க்கான மாணவர்கள் வந்து தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு படிக்கும் மாணவி ஒருவர் தனது தோழிகளுடன் வந்து போலீஸில் புகார் கொடுத்துள்ளார். தான் விடுதி பாத்ரூம்பில் குளித்த போது அதனை ரகசியமாக கேன்டீன் ஊழியர் ஒருவர் வீடியோ எடுத்தார் என்று தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். அப்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட கேன்டீன் ஊழியரை வரவழைத்து விசாரணை நடத்திவிட்டு அவரை கைது செய்தனர். அவரிடமிருந்த மொபைல் போனை சோதனை செய்து பார்த்த போது அதில் குறிப்பிட்ட வீடியோ எதுவும் இல்லை. ஆனாலும் போனில் அழிக்கப்பட்ட தகவல்களை திரும்ப எடுப்பதற்காக போன் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், விடுதியில் இரவு மாணவி ஒருவர் பாத்ரூம்பில் குளிக்க சென்றுள்ளார். பாத்ரூம்பில் திறந்திருந்த ஜன்னல் கதவு வழியாக ரகசியமாக பிந்து என்ற கேன்டீன் ஊழியர் மாணவியை வீடியோ எடுத்ததாக தெரிகிறது.

மும்பை ஐஐடி: பைப் வழியாக ஏறி குளியல் அறையில் வீடியோ எடுத்த கேன்டீன் ஊழியர்! - அதிர்ச்சியடைந்த மாணவி

இதனை பார்த்துவிட்ட மாணவி கூச்சலிட்டு கத்தினார். உடனே மற்ற மாணவிகள் ஓடி வந்தனர். அவர்கள் பிந்துவிடமிருந்த மொபைல் போனை பிடுங்கி சோதனை செய்து பார்த்தனர். பிந்து மாணவியை வீடியோ எடுப்பதற்காக கட்டடத்திற்கு பின்புறம் இருக்கும் பைப் மூலம் முதல் மாடிக்கு ஏறி சென்று பாத்ரூம் வழியாக வீடியோ எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரி மகேஷ்வர் ரெட்டி கூறுகையில், ``கேன்டீன் ஊழியர் மொபைல் போனில் சில வினாடிகள் ஓடக்கூடிய வீடியோ இருந்தது. அதுவும் மிகவும் இருட்டாக இருந்தது. ஊழியர் வீடியோ எடுப்பதற்கு முயற்சி செய்ததாக தெரிகிறது. இது குறித்து அவரிடம் விசாரித்து வருகிறோம்’’ என்று தெரிவித்தார்.