Published:Updated:

மத்தியப் பிரதேச அரசு ஊழியர் வீட்டில் ரெய்டு... வீடு முழுக்கக் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல்!

சித்திரிப்பு

மத்தியப் பிரதேசத்தில் அரசு ஊழியராகப் பணியாற்றுபவரின் இல்லத்தில் ரெய்டு நடத்தப்பட்டதில் ரூ.85 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

மத்தியப் பிரதேச அரசு ஊழியர் வீட்டில் ரெய்டு... வீடு முழுக்கக் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல்!

மத்தியப் பிரதேசத்தில் அரசு ஊழியராகப் பணியாற்றுபவரின் இல்லத்தில் ரெய்டு நடத்தப்பட்டதில் ரூ.85 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Published:Updated:
சித்திரிப்பு

மத்தியப் பிரதேசத்தில் மருத்துவக் கல்வித்துறையில் கிளார்க்காகப் பணியாற்றிவருபவர் கேஷ்வானி. தற்போது மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம் வாங்கும் கேஷ்வானி வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அவர் இல்லத்தில் ரெய்டு நடத்தினர்.

மத்தியப் பிரதேச அரசு ஊழியர் வீட்டில் ரெய்டு... வீடு முழுக்கக் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல்!

இந்த ரெய்டில் கேஷ்வானி வீட்டிலிருந்து கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இரவு வரை நடந்த ரெய்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணுவதற்கு இயந்திரம் கொண்டுவரப்பட்டது. இறுதியில் எண்ணி முடிக்கப்பட்டபோது 85 லட்சம் ரூபாய் இருந்தது. இது தவிர கேஷ்வானி வீட்டிலிருந்து பல கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் வாங்கப்பட்டதற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கேஷ்வானி தனது வீட்டை மிகவும் ஆடம்பரப் பொருள்களைக் கொண்டு அலங்கரித்திருந்தார். அவற்றின் மதிப்பு மட்டும் ரூ.1.5 கோடி.

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்தின் மதிப்பு ரூ.4 கோடி இருக்கும் என்று போலீஸார் தெரிவித்தனர். அசையா சொத்துகள் அனைத்தையும் தன்னுடைய மனைவி பெயரில் கேஷ்வானி வாங்கியிருந்தார். கேஷ்வானியின் குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் அதிக அளவில் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது. ரெய்டுக்காக போலீஸார் கேஷ்வானி வீட்டுக்குச் சென்றபோது வீட்டில் இருந்த துப்புரவு செய்யும் திரவத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அதோடு ரெய்டு நடத்தவிடாமல் அதிகாரிகளைப் பிடித்துத் தள்ளினார். அவரை போலீஸார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. கேஷ்வானி வேலையில் சேரும்போது மாதம் ரூ.4 ஆயிரம் மட்டும் சம்பளம் வாங்கினார். இப்போது 50 ஆயிரம் வாங்கும் கேஷ்வானியால் எப்படி ரூ.4 கோடிக்குச் சம்பாதிக்க முடிந்தது என்பது குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர். பணத்தை வேறு ஏதாவது வீட்டில் மறைத்து வைத்திருக்கிறாரா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டுவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!