Published:Updated:

Indica: சலூனில் கலரிங் செய்த நேர்த்தி வேண்டுமா? இன்டிகா அறிமுகம் செய்யும் 3 இன் 1 கலர் + கேர் கிட்

இன்டிகா

இந்த புத்தம் புதிய DIY தொகுப்பில் கலரிங் செய்த பிறகு முடிசுருள்வதைக் கட்டுப்படுத்துவதற்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள ஹேர் கண்டிஷனர் மற்றும் சீரம் ஆகியவையும் உள்ளடங்கும்

Indica: சலூனில் கலரிங் செய்த நேர்த்தி வேண்டுமா? இன்டிகா அறிமுகம் செய்யும் 3 இன் 1 கலர் + கேர் கிட்

இந்த புத்தம் புதிய DIY தொகுப்பில் கலரிங் செய்த பிறகு முடிசுருள்வதைக் கட்டுப்படுத்துவதற்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள ஹேர் கண்டிஷனர் மற்றும் சீரம் ஆகியவையும் உள்ளடங்கும்

Published:Updated:
இன்டிகா

சென்னை 08 ஆகஸ்ட் 2022: இந்திய ஹேர் கலர் தொழில்துறை சந்தையில் முதன்மை வகிக்கும் இன்டிகா, அதன் புதுமைத் தயாரிப்பான இன்டிகா ஈசி 3 -இன் - 1 கம்ப்ளீட் ஹேர் கலர் + கேர் கிட் என்பதன் அறிமுகத்தை இன்று அறிவித்திருக்கிறது. எஃப்எம்சிஜி பெருநிறுவனமான கவின்கேர் குழுமத்தின் பிரபல பிராண்டுகளுள் ஒன்றான இன்டிகாவின் ஒற்றைப் பயன்பாட்டுக்குரிய இத்தொகுப்பில் ஷாம்பூ ஹேர் கலர் மற்றும் முடி சுருளாமல் தடுக்கவும் மற்றும் பளபளக்கும் மிருதுவான தன்மையை வழங்கவும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள ஹேர் கண்டிஷனர் மற்றும் ஹேர் சீரம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இயற்கையான கருப்புநிற வண்ணத்தில் தற்போது கிடைக்கின்ற இந்த முழுமையான தொகுப்பு, கலரிங் செய்தபிறகு விரைப்புத்தன்மையுடன் தலைமுடி சுருள்வது தொடர்பான கவலைகளுக்கு சரியானத் தீர்வை வழங்கும் உத்தரவாதத்தைத் தருகிறது: அத்துடன், உச்சந்தலையிலிருந்து முடியின் வேர்கள் வரை தலைமுடி பளபளப்பாகவும், செழுமையாகவும் தோன்றச் செய்கிறது.

கவின்கேர் நிறுவனத்தின் பர்சனல் கேர் பிரிவின் பிசினஸ் ஹெட் திரு. ரஜத் நந்தா இப்புதிய அறிமுகம் குறித்து கூறியதாவது: "தொடக்கத்திலிருந்தே ஹேர் கலர் சந்தையில் இன்டிகா புதுமையான தயாரிப்புகளை அறிமுகம் செய்கின்ற பிராண்டாக எப்போதும் இருந்து வருகிறது. இத்துறையில் நுகர்வோர்களுக்கு நட்புறவான பல தயாரிப்புகளை அறிமுகம் செய்து விரைவாக அவற்றைப் பிரபலமாக்கியிருக்கிறது. இச்செயல்பாட்டிற்கு இன்னும் வலுசேர்க்கும் வகையில் ஒற்றைப் பயன்பாடு தொகுப்பில் இவ்வகையினத்தில் முதன்முறையாக மற்றுமொரு புதிய தயாரிப்பை நாங்கள் கண்டறிந்து அறிமுகம் செய்கிறோம். வாடிக்கையாளர்களுக்கு 3 - இன் - 1 கலரிங் மற்றும் கலரிங் செய்ததற்குப் பிந்தைய தலைமுடி பராமரிப்பு ஆதாயத்தை இது வழங்குகிறது. தலைமுடியின் கலரிங், கண்டிஷனிங் மற்றும் ஸ்டைலிங் ஆகிய மூன்று ஆதாயங்களையும் வழங்குகின்ற இன்டிகாவின் புதிய DIY ஹேர் கலர் + கேர் கிட், சலூனில் கிடைக்கக்கூடிய அதே நேர்த்தியான அனுபவத்தை இல்லத்திலேயே வாடிக்கையாளர்கள் பெறுவதை ஏதுவாக்குகிறது. எமது அனைத்து தயாரிப்புகளுமே நுகர்வோர்களின் வரவேற்பை

பெற்ற வெற்றித் தயாரிப்புகளாக இருக்கின்றன. அதைப்போலவே, இப்புதிய அறிமுகமும், சந்தையில் வலுவான இடத்தைப் பெறும் என்று நாங்கள் நம்புகிறோம். DIY (நீங்களே சுயமாக செய்துகொள்ளக்கூடியது) தொகுப்பு, ஹேர் கலரிங்கை வீட்டிலேயே செய்துகொள்வதை எளிதானதாகவும், சிரமமற்ற செயல்பாடாகவும் ஆக்குகிறது. மேலும், கலரிங் செய்தபிறகு தலைமுடியை மிருதுவாகவும், பளபளப்பாகவும் ஆக்கும் திறன் கொண்டதாக இது இருப்பதால், இப்புதிய தயாரிப்பு நுகர்வோரின் வரவேற்பை நிச்சயம் பெறும்."

10 நிமிடங்களில் எளிய தீர்வுகள் (10 minutes easy solutions) என்ற இந்த பிராண்டின் மிகப்பிரபலமான தயாரிப்பைத் தொடர்ந்து இன்டிகாவின் இந்த புத்தம்புதிய, புதுமையான தயாரிப்பு கலர் பாதுகாப்பை உறுதிசெய்கிறது; ஷாம்பூ பயன்படுத்திய பிறகு இழக்கப்படும் நீர்பதத்தை மீண்டும் தலைமுடிக்குத் தருகிறது. செம்பருத்தி மற்றும் நெல்லி போன்ற மூலிகைச்சாரங்களின் ஆதாயத்தையும், கண்டிஷனர் மற்றும் சீரம் ஆகியவற்றின் பலன்களையும் உள்ளடக்கிய இந்த ஹேர் கலர், பாதாம், அவகேடோ மற்றும் ஆர்கன் ஆயில் ஆகியவற்றின் சிறப்பான மூலப்பொருட்களை ஒருங்கிணைப்பதன் மூலம் தலைமுடியின் இயற்கையான பராமரிப்பு மற்றும் ஊட்டத்திற்கு உதவுகிறது. இத்தொகுப்பிலுள்ள கண்டிஷனர், தலைமுடியின் நீர்பதத்தை மீண்டும் வழங்கவும் உதவுகிறபோது தலைமுடி ஒன்றோடொன்று ஒட்டி சிக்கிக்கொள்ளாமல் தடுக்கின்ற ஆதாயங்களோடு அதனை பளபளக்குமாறு செய்ய சீரம் உதவுகிறது. ரூ.51/- என்ற விலையைக் கொண்டிருக்கும் இந்த DIY தொகுப்பு, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள மளிகைக்கடைகளிலும் மற்றும் பிற சில்லரை விற்பனையகங்களிலும் கிடைக்கிறது. அத்துடன் ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற மின் வர்த்தக தளங்களிலும் இதனை வாங்கலாம்.

இன்டிகா குறித்து: 1995-ம் ஆண்டு சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட இன்டிகா ஹெர்பல் ஹேர் கலர், உங்களது தலைமுடியைப் பாதுகாப்பாகவும், திறம்படவும் கலரிங் செய்கின்ற 5 மூலிகை உட்பொருட்களின் நன்மையைக் கொண்டிருக்கிறது. 2009-ம் ஆண்டில் நுகர்வோர்களின் விருப்பம் மற்றும் கருத்துகளின் அடிப்படையில் 10 நிமிடங்களில் ஹேர் கலரிங் செய்யக்கூடிய புதிய தயாரிப்பான இன்டிகா 10 மினிட்ஸ் ஹெர்பல் ஹேர் கலர்ஸ் என்பது சந்தையில் மறுஅறிமுகம் செய்யப்பட்டு, நுகர்வோர்களின் பலத்த வரவேற்பை பெற்றிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கவின்கேர் பிரைவேட் லிமிடெட்:

கவின்கேர் பிரைவேட் லிமிடெட், தனிநபர் பராமரிப்பு, தொழில்முறை பராமரிப்பு, உணவுகள், பால்பொருட்கள், பானங்கள், சூழல் மற்றும் சலூன்கள் தொழிற்பிரிவுகளைக்கொண்டு, ஒரு பன்முக செயல்பாடுள்ள ஒரு ஆகிய துறையில் எஃப்எம்சிஜி பெருநிறுவனமாகும். இதன் பிராண்டுகள் தொகுப்பில் ஷாம்புகள் (சிக், மீரா, கார்த்திகா மற்றும் நைல்) , ஹேர் வாஷ் பவுடர்கள் (மீரா மற்றும் கார்த்திகா), தேங்காய் எண்ணெய் (மீரா). ஃபேர்னஸ் கிரீம்கள் (ஃபேர் எவர்), டியோடரண்ட் மற்றும் டால்க் (ஸ்பின்ஸ்), ஊறுகாய்கள் மற்றும் நொறுக்குத்தீனிகள் (ருச்சி, சின்னிஸ் & கார்டன்), ஹேர் கலர்ஸ் (இன்டிகா), ரீடெய்ல் சலூன் தயாரிப்புகள் (ராகா புரொஃபஷனல்), பானங்கள் (மா), பால் பொருட்கள் (கவின்ஸ்), மற்றும் பியூட்டி சலூன்கள் (கிரீன் டிரென்ட்ஸ் & லைம்லைட்) ஆகியவை அடங்கும். உடல்நலம் மற்றும் தூய்மை வகையினத்தில் தனது செயல்பாடுகளை சமீபத்தில் விரிவாக்கம் செய்திருக்கும் சுவின்கேர், காய்கறிகள் மற்றும் பழங்களின் தூய்மை மற்றும் பாதுகாப்பிற்காக சாஃபூ (மற்றும் பல்வேறு மேற்பரப்புகள் மற்றும் சாதனங்களுக்கான தொற்றுநீக்கியான பாக்டோ-வி என தொற்றுநீக்கல் செய்து தூய்மைப்படுத்தும் தயாரிப்புகளின் அணிவரிசையை வழங்குகிறது. இதன் முக்கியமான ஃபர்சனல் கேர் பிராண்டுகளின் கீழ் ஹேண்டு சானிடைசர்கள் மற்றும் லிக்விட் சோப்பு தயாரிப்புகளையும் கவின்கேர் வழங்கி வருகிறது. இதன் பெரும்பாலான பிராண்டுகள் அவைகளுக்குரிய தயாரிப்பு வகையினங்களில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிற பிராண்டுகளாகும். நவீன சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப திறன்கொண்ட ஒரு பிரத்யேக ஆராய்ச்சி மற்றும் உருவாக்கல் மையமானது, இந்த பல்வேறு துறைகள் முன்னேற்றம் காண்பதற்கு தொடர்ந்து பெரிதும் உதவுகிறது. மிகப்பெரியளவில் சந்தையாக்கல் செய்வதற்கான யுக்திகளையும், அம்சங்களையும் மிகச்சரியாக புரிந்துகொண்டிருக்கும் இந்நிறுவனம், தேசிய அளவிலான சந்தையில் மிக வலுவாக காலூன்றி இருக்கிறது. "பேரார்வமும், பெருமகிழ்ச்சியும் கொண்ட பணியாளர்கள் வழியாக புத்தாக்கத்தை ஊக்குவித்து மக்களால் பெரிதும் விரும்பப்படும் பிராண்டுகளை உருவாக்குவதன் மூலம், தொழில்துறையின் வளர்ச்சியை விட கணிசமான அளவு இன்னும் சிறப்பாக நாங்கள் வளர்ச்சி காண்போம்” என்ற தனது கார்ப்பரேட் செயல்நோக்கம் மற்றும் திட்டத்தின் மீது வலுவான அடித்தளத்தை அமைத்திருப்பதே கவின்கேரின் வெற்றிக்கு காரணமாகும்.