வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, தொண்டு நிறுவனங்கள் (என்.ஜி.ஓ), வெளிநாட்டிலிருந்து நிதி பெற மத்திய உள்துறை அமைச்சகத்தில் பதிவுசெய்ய வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் அதைப் புதுப்பிக்கவும் வேண்டும்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில், வெளிநாட்டுப் பங்களிப்புக்காக, தொண்டு நிறுவனங்கள் பதிவு மற்றும் புதுப்பித்தல் செய்வதில் மோசடி நடப்பதாக சி.பி.ஐ-க்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதிகாரிகள், இடைத்தரகர்கள், தொண்டு நிறுவனங்கள் என்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சி.பி.ஐ ரெய்டு நடத்தியது.
சி.பி.ஐ பதிவுசெய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், மத்திய உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றிவரும் பர்மோத் குமார்பசின் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். வெளிநாட்டுப் பங்களிப்புக்காக தொண்டு நிறுவனங்கள் பதிவு மற்றும் புதுப்பித்தலுக்கு பர்மோத் லஞ்சம் பெறுவதாகப் புகார் எழுந்தது.

சி.பி.ஐ அதிகாரிகள் அவரைத் தொடர்ந்து கண்காணித்தபோது, பர்மோத், கோவை சாய் பாபா கோயில் பகுதியிலுள்ள கங்கா மருத்துவமனை நிர்வாகி டாக்டர் ராஜசேகர் என்பவரைத் தொடர்புகொண்டிருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
``உங்களது தொண்டு நிறுவனம் வெளிநாட்டு நிதி பெறுவதற்கான பதிவு புதுப்பித்தல் எங்களிடம் நிலுவையில் உள்ளது. உங்கள் வரவு செலவு கணக்கு விவரங்களை ஆய்வு செய்தபோது சில குளறுபடிகள் உள்ளன. இதற்கு 5% அபராதம் செலுத்த வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

இதையடுத்து, அந்தத் தொண்டு நிறுவனத்தின் ஆடிட்டர் வாகேஷ், பர்மோத்தைத் தொடர்பு கொண்டபோது, அவர் ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டிருக்கிறார். தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் மற்றொரு ஆடிட்டர் சுகுணா என்ற பெண் பர்மோத்தைத் தொடர்புகொண்டு லஞ்சத் தொகையை ரூ.1.5 லட்சமாகக் குறைக்கச் சொல்லியிருக்கிறார்.
ஆனால், பர்மோத் மறுத்துவிட்டார். மேலும், முதற்கட்டமாக ஹவாலா ஆபரேட்டர் மூலம் ரூ.1.5 லட்சம் தர வேண்டும், புதுப்பித்தல் நடைமுறை முடிந்த பிறகு ரூ.50,000 தர வேண்டும் எனக் கூறியுள்ளார். அவர் கூறியபடி, கடந்த மாதம் வாகேஷ், ஒரு ஹவாலா ஆபரேட்டரிடம் ரூ.1.5 லட்சம் தந்துள்ளார்.

கூடவே இதேபோல நாடு முழுவதும் பல இடங்களில் பர்மோத் லஞ்சம் வாங்கியுள்ளார். இது தொடர்பாக சி.பி.ஐ., பர்மோத், டாக்டர் ராஜசேகர், சுகுணா, வாகேஷ், அதிகாரிகள், ஹவாலா நெட்வொர்க் ஆபரேட்டர்கள் என நாடு முழுவதும் 36 பேர் மீது வழக்கு பதிவுசெய்துள்ளது.
இந்த வழக்கில் பர்மோத், வாகேஷ், ஆறு அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேரை சி.பி.ஐ கைதுசெய்துள்ளது. டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், ஜார்க்கண்ட், ஹிமாச்சல் பிரதேசம், தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, அஸ்ஸாம்,

மணிப்பூர் மற்றும் தமிழ்நாட்டில் சென்னை, கோவை நாடு முழுவதும் 40 இடங்களில் ரெய்டு நடத்தியுள்ளனர். அப்போது ரூ.3.21 கோடி ரொக்கம், செல்போன் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன