Published:Updated:

 கொரோனா: ஒத்திவைக்கப்பட்ட சிபிஎஸ்இ, ஜேஇஇ உள்ளிட்ட முக்கியத் தேர்வுகள்!

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள்
சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள்

நடந்துகொண்டிருந்த சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு ,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் தற்போதைக்கு ரத்துசெய்யப்பட்டுள்ளன.

சர்வதேச அளவிலான கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து, சிபிஎஸ்இ, ஜேஇஇ, பல்கலைக்கழகத் தேர்வுகள் உள்ளிட்ட பல முக்கியத் தேர்வுகளை மத்திய மனிதவள மேம்பாட்டுக் கல்வி அமைச்சகம் ஒத்திவைக்க உத்தரவிட்டுள்ளது.

சிபிஎஸ்இ
சிபிஎஸ்இ
என்.டி.டி.வி

சர்வதேச அளவில் விஸ்வரூபம் எடுத்துவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால், உலக அளவில் 9000 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலும் இந்த நோய் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மிகப் பெரிய அளவிலான மெடிக்கல் எமர்ஜென்ஸி சூழலை ஏற்படுத்தியுள்ள இந்த நோய் தாக்கத்திலி ருந்து தப்பிக்க, மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளை ரத்துசெய்வதோடு, பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளன. இந்த நிலையில், சிபிஎஸ்இ, ஜேஇஇ, மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் தேர்வுகள் (UGC), அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் ( AICTE) சார்பில் நடைபெறும் தேர்வுகள், தேசிய திறந்தவெளிப் பள்ளிகளின் தேர்வு (NIOS), ஐஐடி-களுக்கான ஜேஇஇ தேர்வு (JEE) உள்ளிட்ட அனைத்து மத்திய கல்வி நிறுவனத் தேர்வுகளையும் மத்திய மனிதவள கல்வி மேம்பாட்டு அமைச்சகம், வரும் மார்ச் 31-ம் தேதி வரை ஒத்திவைத்துள்ளது.

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள்
சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள்

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு தேர்வுக்கான தேதியை அறிவிக்கும். நடந்துகொண்டிருந்த சிபி எஸ்இ, 10-ம் வகுப்பு ,12 -ம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் தற்போதைக்கு ரத்துசெய்யப்பட்டுள்ளன. வாரியத் தேர்வுகள் தொடர்பான அனைத்து மதிப்பீட்டுப் பணிகளும் மார்ச் 31-ம் தேதி வரை நிறுத்தப்பட வேண்டும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவுறுத்தியுள்ளது. இதேபோன்று, ஜேஇஇ மெயின் தேர்வுகள், வரும் ஏப்ரல் 5 ,7, 9, 11 ஆகிய தேதிகளில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அந்தத் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அதற்கான தேதியும் பின்னர் அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு