Published:Updated:

`5 வாரங்களுக்குப் பின்..!’ -மத்திய அரசின் அனுமதியால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நிம்மதி #Lockdown

சொந்த ஊர்களுக்கு நடந்து செல்லும் மக்கள்
சொந்த ஊர்களுக்கு நடந்து செல்லும் மக்கள்

சொந்த ஊருக்குச் சென்ற பயணிகள் அவ்வப்போது சுகாதாரப் பரிசோதனைகளுடன் கண்காணிக்கப்படுவார்கள்.

நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு ஏறக்குறைய ஐந்து வாரங்களுக்குப் பின் கொரோனா வைரஸின் அறிகுறிகள் இல்லாத, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள், யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. COVID-19 இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வீட்டிற்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரிய மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்திற்குப் பதிலளிக்குமாறு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனந்த் விகார்
ஆனந்த் விகார்
`தினக்கூலி தொழிலாளர்களின் நிலை?’ -அச்சத்தை ஏற்படுத்திய ஆனந்த் விகார் பேருந்துநிலைய காட்சிகள் #Corona

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வீட்டிற்குச் செல்ல நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற சம்பவங்கள் ஏராளம். அதில் சிலர் பரிதாபமாக உயிரிழந்தும் உள்ளனர். இதைத் தொடர்ந்து மத்திய அரசு தற்போது மாநில அரசின் ஒத்துழைப்புடன் வேறு ஊர்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் இந்தப் புதிய நடவடிக்கையை முடிவு செய்துள்ளது.

உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்கள் மூலம் மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களில் சிக்கித் தவிக்கும் மக்கள், மாநில அரசுகளால் ஏற்பாடு செய்யப்படும் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படுவார்கள். பயணத்திற்கு முன்பும் பின்னரும் கொரோனா தொற்று ஸ்கிரீனிங் செய்யப்பட்டு 14 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்துதலில் வைக்கப்படுவர். போக்குவரத்துக்காக அதிகாரிகள் நியமிக்கப்படுவதாகவும் பயணிப்பவர்கள் சில நிபந்தனைகளுடன் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா போன்ற சில மாநிலங்கள் கோரியபடி சிக்கித் தவிக்கும் மக்களை அழைத்துச் செல்ல சிறப்பு ரயில்களை இயக்க மத்திய அரசு மறுத்துவிட்டது. ரயில் மற்றும் விமான சேவை தற்போது இல்லாததால் கிருமிநாசினி கொண்டு சுகாதாரம் செய்த பேருந்துகள் மூலம் போதிய சமூக இடைவெளியைப் பின்பற்றி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைக்குச் செல்லும் வடமாநிலத் தொழிலாளர்கள்
வேலைக்குச் செல்லும் வடமாநிலத் தொழிலாளர்கள்

சொந்த ஊருக்குச் சென்ற பயணிகள் அவ்வப்போது சுகாதாரப் பரிசோதனைகளுடன் கண்காணிக்கப்படுவார்கள். உத்தரப்பிரதேசத்திலிருந்து 12,000 -க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வார இறுதிக்குள் ஹரியானாவிலிருந்து அழைத்துவர முயற்சி செய்து வருகின்றது. பயிற்சி மையங்கள் அதிகம் இருக்கும் ராஜஸ்தானின் கோட்டாவிலிருந்து மாணவர்களை அழைத்துவர உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட பிறப்பித்துள்ளார். சிறப்பு ஏற்பாட்டின் ஒரு பகுதியாக இமாசலில் சிக்கிய சில தொழிலாளர்களும் தங்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். 40 நாள் லாக்டௌன் காலகட்டத்தில், பல்வேறு மாநிலங்களில் வேலைக்காகக் குடியேறிய புலம்பெயர் தொழிலாளர்கள் பல இன்னல்களைச் சந்தித்தனர்.

"எத்தனை பேர் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பது குறித்து மத்திய அரசு மாநிலங்களுடன் ஆலோசித்து வருகிறது. நாங்கள் எல்லா வகையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்" என்று இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா திங்களன்று கூறியிருந்தார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
`நன்றியுணர்வைக் காட்ட நினைத்தோம்..!’ - அரசுப் பள்ளியை ஜொலிக்க வைத்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

இதனிடையில் திங்களன்று, பிரதமர் நரேந்திர மோடி சுமார் மாநில முதல்வர்களுடன் நான்காவது வீடியோ மாநாட்டை நடத்தினார். அதில் லாக்டௌன் திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது. பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் நிலைமை அதிகரித்து வருவதால் நாடு தழுவிய ஊடங்கை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு