Published:Updated:

புதுப்பொலிவுடன் சென்ட்ரல் விஸ்டா திட்டம்... நாளை திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!

சென்ட்ரல் விஸ்டா

சென்ட்ரல் விஸ்டா திட்டம்: ``அரசாங்கத்தின் தேவைகள் மற்றும் பணிகள் விரிவடைந்துள்ளன. அதனால் விரிவாக்கம் தேவைப்படுகிறது."

புதுப்பொலிவுடன் சென்ட்ரல் விஸ்டா திட்டம்... நாளை திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!

சென்ட்ரல் விஸ்டா திட்டம்: ``அரசாங்கத்தின் தேவைகள் மற்றும் பணிகள் விரிவடைந்துள்ளன. அதனால் விரிவாக்கம் தேவைப்படுகிறது."

Published:Updated:
சென்ட்ரல் விஸ்டா

மத்திய அரசாங்கத்தால் மறு வடிவமைக்கப்பட்ட ராஜபாத் (இப்போது கர்தவ்யா பாத்) மற்றும் சென்ட்ரல் விஸ்டாவை நாளை (8/9/22) பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கவிருக்கிறார்.

இந்த நிகழ்வைப் பார்வையிட குழந்தைகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் காரணமாக புதுடெல்லியின் பல பகுதிகளில் போக்குவரத்துத்துறை பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சென்ட்ரல் விஸ்டா: ( புதிய நாடாளுமன்றத் திட்டம்)

`புதிய நாடாளுமன்றத் திட்டம்’ என்பது புதுடெல்லியின் ஒன்றிய நிர்வாகப் பகுதியை மறுவடிவமைக்கும் திட்டம்.

புதுப்பொலிவுடன் சென்ட்ரல் விஸ்டா திட்டம்... நாளை திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!

புதிய நாடாளுமன்றத் திட்டத்தின் நோக்கம்:

அரசாங்கத்தின் தரப்பில் இந்தப் புதிய நாடாளுமன்றத் திட்டத்துக்கான அறிக்கையில், ``அரசாங்காத்தின் தேவைகள் மற்றும் பணிகள் விரிவடைந்துள்ளன. அதனால் விரிவாக்கம் தேவைப்படுகிறது. அதோடு, இது நூற்றாண்டு பழைமைகொண்டது. ஆனால், நம் நாட்டின் தற்போதைய வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை ஒப்பிடுகையில், நாட்டின் தேவைகளைப் பூர்த்திசெய்ய இந்தப் பழைய நாடாளுமன்றம் தவறிவிட்டது” எனக் கூறப்பட்டிருக்கிறது.

புதிய நாடாளுமன்றத் திட்டம் – பணிகள்:

புதிய நாடாளுமன்ற மறுவடிவமைப்புத் திட்டம், செப். 2019-ல் ஆரம்பிக்கப்பட்டது. அக். 2019-ல் அகமதாபாத்தின் ஹெச்.சி.பி டிசைன் மற்றும் பிளானிங் எனும் தனியார் நிறுவனம் (HCP Design and Planning Management) கட்டட வேலைக்கான ஆலோசனைப் பணிகளைச் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டது. செப். 2020-ல் டாடா புராஜெக்ட்ஸ் லிமிட்டெட் (Tata Project Limited), ரூ.862 கோடி மதிப்பிலான இதற்கான கட்டுமானப் பணிகளைச் செய்ய மத்திய பொதுபணித்துறையால் தேர்ந்தெடுக்கப்பட்டது. டிச. 2020-ல் பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.

புதுப்பொலிவுடன் சென்ட்ரல் விஸ்டா திட்டம்... நாளை திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!

ஜன. 5, 2021-ல் உச்ச நீதிமன்றம் புதிய நாடாளுமன்ற மறுவடிவமைப்புத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து, ஷப்பூர்ஜி பல்லோன்ஜி (Shapoorji Pallonji and Company Pvt Ltd) எனும் தனியார் நிறுவனம் ரூ. 477 கோடி மதிப்பிலான ராஜ்பாத் மறுவடிவமைப்புத் திட்டத்தை மத்திய பொதுபணித்துறையால் மேற்கொண்டது. கொரோனா தொற்றுக் காலகட்டத்தில், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில், இந்தத் திட்டத்துக்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. மே.31, 2021-ல் டெல்லி உயர் நீதிமன்றம் இந்தத் திட்டம் நாட்டுக்கு அத்தியாவசியம் என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது. பிறகு, ஜூன் 2021-ல், புதிய பாதுகாப்பு அலுவலக வளாகம் திறக்கப்பட்டது.

புதுப்பொலிவுடன் சென்ட்ரல் விஸ்டா திட்டம்... நாளை திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஜூன்.23,2022-ல் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் புதிய தலைமையகமான வணிஜ்ய பவன் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஜூலை11, 2022-ல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் மேல் உள்ள வெண்கலத்தால் செய்யப்பட்ட இந்தியாவின் தேசியச் சின்னத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.. அந்தச் சின்னத்தில் உள்ள சிங்கங்களின் பற்கள் கோரமாகக் காட்சியளிக்கின்றன என்று சர்சைகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

புதுப்பொலிவுடன் சென்ட்ரல் விஸ்டா திட்டம்... நாளை திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!

இந்தத் திட்டத்தின் மூலம் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை பொது அருங்காட்சியகமாக மாற்றுதல், அனைத்து அமைச்சகங்களும் அமையும்படி புதுச் செயலகக் கட்டடங்களை உருவாக்குதல், துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகளை வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளுக்கு இடமாற்றம் செய்தல், 3 கி.மீ (1.9 மைல்) தொலைவு வரையில் மறுவடிவமைப்பு செய்து, ராஷ்ட்ரபதி பவன் மற்றும் இந்தியா கேட் இடையே நீண்ட ராஜபாதை என மறுவடிவமைக்கப்பட்ட திட்டம் அறிவிக்கப்பட்டது.

புதுப்பொலிவுடன் சென்ட்ரல் விஸ்டா திட்டம்... நாளை திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!

2026-ல் இந்தியா தனது நாடாளுமன்ற உறுப்பினர்களை விரிவுபடுத்தும் திட்டம் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதிக இருக்கை வசதியுடன் புது நாடாளுமன்ற மறுவடிவமைப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் நாளை (8/9/22) புதிய நாடாளுமன்றம் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்துவைக்கப்படவிருக்கிறது.