Published:Updated:

ஸொமேட்டோவின் 10 நிமிட உணவு டெலிவரி; ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து விளக்கம் கேட்கும் காவல் துறை!

10 நிமிட டெலிவரிக்காக சாலையில் வண்டியை வேகமாக ஓட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும்; இது தற்காலிக டெலிவரி ஊழியர்களின் வாழ்க்கையை ஆபத்தில் நிறுத்துவதாக பலரும் குற்றம் சாட்டினர். இதற்கு பல தரப்பினரிடையே எதிர்ப்புகள் வலுத்த வண்ணம் இருந்தது.

ஸொமேட்டோவின் 10 நிமிட உணவு டெலிவரி; ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து விளக்கம் கேட்கும் காவல் துறை!

10 நிமிட டெலிவரிக்காக சாலையில் வண்டியை வேகமாக ஓட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும்; இது தற்காலிக டெலிவரி ஊழியர்களின் வாழ்க்கையை ஆபத்தில் நிறுத்துவதாக பலரும் குற்றம் சாட்டினர். இதற்கு பல தரப்பினரிடையே எதிர்ப்புகள் வலுத்த வண்ணம் இருந்தது.

Published:Updated:

ஸொமேட்டோவின் இணை நிறுவனரான தீபிந்தர் கோயல், `10 நிமிடங்களுக்குள் மக்களுக்கு உணவு விநியோக்கப்படும்' என்ற ஒரு புதிய திட்டத்தைத் திங்கள்கிழமை அறிவித்தார். அடுத்த மாதத்திலிருந்து பத்து நிமிடங்களில் உணவு வழங்கும் இந்தப் புதிய முயற்சி குர்கானில் தொடங்கப்படும். உணவை விரைவாக டெலிவரி செய்ய டெலிவரி ஊழியர்களுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கப்படாது. தாமதமாக டெலிவரி செய்யும் டெலிவரி ஊழியர்களுக்கு அபராதமும் விதிக்கப்படாது.

Zomato
Zomato

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாலையில் நேரத்தை நிர்வகிக்க முடியாது என்பதால், குறிப்பிட்ட நேரத்துக்குள் உணவை சேர்ப்பதற்காக எந்த உயிரையும் ஆபத்தில் விட முடியாது. அதுமட்டுமல்லாமல் இந்த 10 நிமிட டெலிவரி குறிப்பிட்ட, பிரபலமான, மெனுவில் கொடுக்கப்பட்ட இடங்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்படும் என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில், இந்த 10 நிமிட டெலிவரிக்காக சாலையில் வண்டியை வேகமாக ஓட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும்; இது தற்காலிக டெலிவரி ஊழியர்களின் வாழ்க்கையை ஆபத்தில் நிறுத்துவதாகப் பலரும் குற்றம் சாட்டினர். இதற்குப் பல தரப்பினரிடையே எதிர்ப்புகள் வலுத்த வண்ணம் இருந்தது.

Zomato
Zomato

அதைத் தொடர்ந்து டெலிவரி ஊழியர்களின் சாலை பாதுகாப்பு குறித்து ஸொமேட்டோ நிறுவனம் விளக்கமளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது எனச் சென்னை போக்குவரத்துத் துறை போலீஸார் ஸொமேட்டோவின் 10 நிமிட உணவு டெலிவரி குறித்து விளக்கமளிக்கக் கேட்டுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism