Published:Updated:

"ஒரு லிட்டர் கோமியம் ரூ.4-க்குக் கொள்முதல் செய்யப்படும்" -சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசு அறிவிப்பு!

representational

சத்தீஸ்கர்: கோமியம் கொள்முதல் திட்டத்தை ஜூலை 28-ம் தேதி முதல்வர் பூபேஷ் பாகல் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின்படி விவசாயிகளிடம் ஒரு லிட்டர் கோமியம் ரூ. 4-க்குக் கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஒரு லிட்டர் கோமியம் ரூ.4-க்குக் கொள்முதல் செய்யப்படும்" -சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசு அறிவிப்பு!

சத்தீஸ்கர்: கோமியம் கொள்முதல் திட்டத்தை ஜூலை 28-ம் தேதி முதல்வர் பூபேஷ் பாகல் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின்படி விவசாயிகளிடம் ஒரு லிட்டர் கோமியம் ரூ. 4-க்குக் கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
representational

சத்தீஸ்கர்: பூபேஷ் பாகல் தலமையிலான சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசு கால்நடைகளின் சாணம், கோமியம் போன்றவற்றை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து அதைப் பல்வேறு வகையில் விற்பனைப் பொருள்களாக மாற்றுவதில் தீவிரம்காட்டி வருகிறது. அங்தவகையில் கால்நடைகளின் சாணத்தைக் கொள்முதல் செய்து அதிலிருந்து பல்வேறு வகையான பொருள்களைத் தயாரித்து லாபம் ஈட்டலாம் என்று கூறியிருந்தது. அதன்படி கால்நடைகளின் சாணத்தை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துவருகிறது.

இதையடுத்து சமீபத்தில் நடந்த சத்தீஸ்கர் மாநிலத்தின் பட்ஜெட் தாக்களில் கால்நடை வளர்ப்பு தொடர்பான ஏராளமான அறிவிப்புகளை காங்கிரஸ் அரசு அறிவித்தது. அதில் முக்கியமானது கோமியம் கொள்முதல் திட்டம். இந்தத் திட்டத்தை அமலுக்குக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் சத்தீஸ்கர் மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

representational
representational

இந்நிலையில், விவசாயிகளிடம் ஒரு லிட்டர் கோமியம் ரூ. 4-க்குக் கொள்முதல் செய்யப்படும் என்றும், மாதம் இருமுறை கோமியத்துக்கான தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு நியமிக்கப்பட்ட தனியான 'கௌதன்'களில் (பசுக்கள் தங்குமிடம்) மாட்டுக் கோமியம் கொள்முதல் செய்யப்படும். இதற்கான ஏற்பாடுகள் அனைத்து அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் முன்னிலையில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முதல்வர் பூபேஷ் பாகல் ஜூலை 28-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.

இந்தத் திட்டம் தற்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள முக்கிய மாவட்டங்களில் மட்டும் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் விரைவில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!