Published:Updated:

இறந்த மகளின் உடலைத் தோளில் சுமந்துகொண்டு 10 கி.மீ நடந்தே சென்ற தந்தை! - விசாரணைக்கு உத்தரவு

தந்தை-மகள் ( ட்விட்டர் )

சத்தீஸ்கர் மாநிலத்தில், இறந்த மகளின் உடலைத் தோளில் சுமந்து 10 கிலோமீட்டர் நடந்தே சென்ற தந்தையின் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது.

சத்தீஸ்கர் மாநிலம், சுர்குஜா மாவட்டத்திலுள்ள ஆம்தாலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர் தாஸ். இவருடைய மகள் சுரேகா (7). கடந்த சில நாள்களாகவே அதிக காய்ச்சலால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அருகிலுள்ள சுகாதார மையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அந்தச் சிறுமிக்கு ஆக்சிஜன் அளவு மிகவும் குறைவாக இருந்த காரணத்தால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து உறவினர்கள் உயிரிழந்த சிறுமியின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸை அழைத்தனர். வேறு ஒரு சடலம் விரைவில் வரவிருப்பதாகக் கூறி, இவர்களைக் காத்திருக்கச் சொன்னார்கள். நீண்ட நேரம் காத்திருந்த ஈஸ்வர் தாஸ், தனது மகளைத் தோளில் சுமந்தவாறு 10 கிலோமீட்டர் தூரம் தனது கிராமத்தை நோக்கி சாலையில் நடந்து சென்றிருக்கிறார். இது குறித்தான வீடியோ இணையத்தில் வெளியானதையடுத்து, அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் சிங் தியோ இந்தச் சம்பவம் பற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ``இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்திருக்க வேண்டும்'' என அவர் தெரிவித்திருக்கிறார்.