Published:Updated:

21 ஆண்டுகளுக்குப் பிறகு சபதம் நிறைவேறியது... தனது தாடியை சவரம் செய்த முதியவர்! - என்ன காரணம்?

21 ஆண்டுகளுக்குப் பிறகு முதியவர் சபதம் நிறைவேறியது ( ட்விட்டர் )

சத்தீஸ்கர் மாநிலத்தில் தான் வசிக்கும் பகுதியை மாநிலத்தின் 32-வது மாவட்டமாக மாற்றி அறிவிக்கும் வரை தாடியை சவரம் செய்ய மாட்டேன் என ஒரு முதியவர் சபதம் செய்திருந்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் வசித்துவரும் ஆர்டிஐ ஆர்வலரான ராம் சங்கர் குப்தா என்பவர் வித்தியாசமான முறையில் சபதம் எடுத்திருக்கிறார். சிர்யிரி-பாரத்பூர் என்ற பகுதியை இணைத்து சத்தீஸ்கரின் 32-வது மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அந்தப் பகுதி மாவட்டமாக மாறும்வரை தான் தாடியைச் சவரம் செய்ய மாட்டேன் எனச் சபதம் எடுத்திருக்கிறார். ராம் சங்கர் குப்தா கடந்த 21 ஆண்டுகளாக இந்தக் கோரிக்கையை வைத்துவருகிறார்.

இந்த நிலையில், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் வெள்ளிக்கிழமையன்று மனேந்திரகர் - சிர்மிரி - பாரத்பூர் பகுதியை அதிகாரபூர்வமாக மாவட்டமாக அறிவித்தார்.

இதையடுத்து அவர் தனது தாடியை சவரம் செய்திருக்கிறார். கடந்த ஆண்டே இந்தப் பகுதியை மாவட்டமாக மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்போதே தாடியை அவர் சவரம் செய்துவிட்டார். அதன் பின்னர் பணிகள் தொடங்கப்படாத நிலையில் மீண்டும் தாடி வளர்க்க ஆரம்பித்திருக்கிறார். இதையடுத்து, தற்போது பணிகள் தொடங்கப்பட்டதையொட்டி, அவர் ஒரு வருடமாக வளர்த்துவந்த தாடியை மீண்டும் சவரம் செய்திருக்கிறார்.

இந்தப் பகுதி மாவட்டமாக அறிவிக்கப்படவில்லையென்றால், வாழ்நாள் முழுவதும் தாடி வளர்த்திருப்பேன் என ராம் சங்கர் குப்தா கூறியிருந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.