Published:Updated:

சத்தீஸ்கர்: கான்ஸ்டபிளாகத் தேர்வு செய்யப்பட்ட 13 திருநங்கைகள்... குவியும் வாழ்த்துகள்!

chattisgarh police

சரியான வாய்ப்பு கிடைத்தால் அனைத்துத் துறைகளிலும் சாதித்துக் காட்டுவோம் என நிரூபித்துள்ளனர் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த திருநங்கைகள்.

சத்தீஸ்கர்: கான்ஸ்டபிளாகத் தேர்வு செய்யப்பட்ட 13 திருநங்கைகள்... குவியும் வாழ்த்துகள்!

சரியான வாய்ப்பு கிடைத்தால் அனைத்துத் துறைகளிலும் சாதித்துக் காட்டுவோம் என நிரூபித்துள்ளனர் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த திருநங்கைகள்.

Published:Updated:
chattisgarh police

சரியான வாய்ப்புக் கிடைத்தால் அனைத்துத் துறைகளிலும் சாதித்துக் காட்டுவோம் என நிரூபித்துள்ளனர் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த திருநங்கைகள்.

சத்தீஸ்கரில் 2019-20 கான்ஸ்டபிள் தேர்வுக்கான முடிவுகள், கடந்த திங்களன்று வெளியிடப்பட்டது. மார்ச் 1-ம் தேதி அறிவிக்கப்பட்ட அந்த முடிவுகளில், 13 திருநங்கைகள் கான்ஸ்டபிள் பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் எனபது சிறப்புச் செய்தி.

"மாநில காவல்துறையில் 13 திருநங்கைகள் பணிக்கு சேர்க்கப்படுவது நாட்டிலேயே இதுதான் முதல் முறை'' என்று சத்தீஸ்கர் காவல்துறை உயரதிகாரிகள் பெருமையுடன் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னதாக, தமிழ்நாட்டில் ஒருவர், ராஜஸ்தானில் ஒருவர் என இரண்டு திருநங்கைகள் காவல்துறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருநங்கைகள்
திருநங்கைகள்

2019 - 2020ல் நடத்தி முடிக்கப்பட்ட கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளின் அடிப்படையில், மாநிலம் முழுக்கவிருந்து 2038 பேர் பணிக்காதத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,736 பேர் ஆண்கள், 289 பேர் பெண்கள், 13 பேர் திருநங்கைகள்.

தேர்வு செய்யப்பட்ட திருநங்கைகள், தங்கள் சமுதாயத்துக்கு நம்பிக்கை தரும் விதமாக தங்கள் வெற்றி பற்றி பகிர்ந்துள்ளனர். 'திருநங்கைகள் சமூகத்துக்கு எதிரான பல சமூக இடையூறுகளுக்கு மத்தியிலும் நாங்கள் தற்போது போலீஸ் சீருடை அணிந்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் வெற்றி மற்ற திருநங்கைகளின் தன்னம்பிக்கையை உயர்த்துவது மட்டுமல்லாமல், திருநங்கைகள் மீதான சமூகத்தின் கருத்தை மாற்றும் என்ற நம்பிக்கையோடு பணியை தொடர உள்ளோம்' என்று தெரிவித்துள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மாநிலத்தில் திருநங்கைகளின் முன்னேற்றத்துக்காக செயலாற்றிவரும் செயற்பாட்டாளர் வித்யா ராஜ்புத், 'எங்கள் அமைப்பின் பல முயற்சிகளுக்குப் பிறகு, பல மாவட்டங்களைச் சேர்ந்த 40 திருநங்கைகள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பை சத்தீஸ்கர் காவல்துறை வழங்கியது. பயிற்சி காலத்தின்போது, சக ஆண் மற்றும் பெண் பங்கேற்பாளர்கள் தங்களுடன் பயிற்சி எடுத்துக்கொள்ள வந்த திருநங்கைகளை கேலியாகப் பார்த்தாலும், பின்னர் அவர்கள் திருநங்கைகளின் அர்ப்பணிப்பையும் வலிமையையும் உணர்ந்து அவர்களுடன் நட்பாகினர், இயல்பாகப் பழகினர்' என்கிறார்.

Police Walkie Talkie
Police Walkie Talkie
Photo: Vikatan / Sakthi Arunagiri.V

தேர்வுசெய்யப்பட்டுள்ள திருநங்கைகளில் பலர், இதுவரை வாழ்வாதாரத்துக்கான எந்த ஸ்திரமும் இன்றி ஹோட்டல்களில் பாத்திரம் கழுவுவது முதல் பல முறைசாரா பணிகளில் ஈடுபட்டு வந்தவர்கள். இப்போது இவர்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பும் அடையாளமும், நாடு முழுக்கவுள்ள திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்புகள் குறித்த நம்பிக்கையையும், அதற்கான முயற்சிகள் எடுப்பதற்கான ஊக்கத்தையும் கொடுத்திருக்கிறது.