Election bannerElection banner
Published:Updated:

`நள்ளிரவில் எழுந்துகொள்கிறார்கள்; அழுகை வருகிறது!’- கலவரத்தால் மன அளவில் பாதிக்கப்பட்ட குழந்தைகள்

டெல்லி வன்முறை
டெல்லி வன்முறை

``முகாமில் வசிக்கும் பல குழந்தைகளுக்கு தூக்கமின்மை, மன உளைச்சல், பசியின்மை, சமூகத்திலிருந்து விலகி இருக்கும் மனப்பான்மை அதிகமாக இருப்பதாகவும் அவர்களுக்கு அழுகை வருகிறது. ஆனால், கண்ணீரை வெளியேற்றுவதை அவர்கள் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார்.”

``சிவ் விகார் பகுதியைச் சேர்ந்த 9 வயதான ஆசிஃப் இப்போது சரியாகத் தூங்குவதில்லை. வன்முறையாளர்கள், பக்கத்து வீடுகளில் பெட்ரோல் குண்டுகளை வீசியதில் பற்றி எரிந்த தீப்பிழம்புகளை நினைத்து நள்ளிரவில் திடீரென்று எழுந்திருக்கிறான். ஒவ்வொரு முறை அதைப் பற்றி பேசும்போதும் அவனது கண்களில் அச்ச உணர்வு எழுகிறது. ஆனால், கண்களில் இருந்து கண்ணீர் வழிவதே இல்லை” - டெல்லியில் நடந்த வன்முறைகளால் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான குழந்தைகளில் ஆசிஃப்-ம் ஒருவர்.

டெல்லி கலவரம்
டெல்லி கலவரம்

வன்முறை போன்ற சம்பவங்களால் குழந்தைகள் எவ்வளவு பாதிப்படைகின்றனர் என்பதற்கான உதாரணமும் அவர்தான். வடகிழக்குப் பகுதிகளில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது முஸ்தஃபாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் வசிக்கின்றனர். இங்கு சுமார் 200 குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் உள்ளனர். இந்தக் குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் வன்முறைகளைப் பார்த்துப் பயந்து பதற்றத்தில் இருப்பதால் மன உளைச்சலைத் தடுக்க டெல்லி குழந்தைகள் உரிமை ஆணையம் அவர்களுக்கு ஆலோசனைகளையும் பயிற்சிகளையும் வழங்கி வருகிறது.

இதுதொடர்பாக மனநல ஆலோசகர் ஸ்ருதி சர்மா பேசும்போது, ``முகாமில் 7 முதல் 13 வயதுக்கு உட்பட்ட அதிக குழந்தைகள் உள்ளனர். வன்முறைகளால் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நினைவுகளை விரைவில் அவர்கள் மனத்திலிருந்து அகற்றுவது கடினம். ஆனால், முறையான பயிற்சிகள் அவர்களை இதமாக உணர வைக்கும். அவர்களுக்கு படம் வரைவதற்கான புத்தகங்களைக் கொடுத்துள்ளோம். குழந்தைகளில் சிலர் அதில் இயற்கைக் காட்சிகள் மற்றும் இந்தியாவின் கொடிகளை வரைந்தார்கள். ஆனால், மற்ற சில குழந்தைகள் கலவரங்களில் தாங்கள் பார்த்த நெருப்பு எரியும் பாட்டில்கள், சிலிண்டர் வெடிக்கும் காட்சிகள் ஆகியவற்றை வரைகிறார்கள். நாங்கள் குழந்தைகளைப் பேச வைக்கவும் இதமாக உணர வைக்கவும் முயற்சி செய்து வருகிறோம்” என்று கூறினார்.

டெல்லி கலவரம்
டெல்லி கலவரம்

முகாமில் வசிக்கும் பல குழந்தைகளுக்கு தூக்கமின்மை, மன உளைச்சல், பசியின்மை, சமூகத்திலிருந்து விலகி இருக்கும் மனப்பான்மை அதிகமாக இருப்பதாகவும் அவர்களுக்கு அழுகை வருகிறது. ஆனால், கண்ணீரை வெளியேற்றுவதை அவர்கள் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார்.

``ஒரு சிறுவன் பல நாள்களாக மௌனமாகவே இருக்கிறான். அவன் தன் தந்தையுடன் மசூதிக்குத் தொழுகைக்குச் செல்லும்போது கலவரக்காரர்களால் எதிர்கொள்ளப்பட்டுள்ளான். அவர்கள் அவனின் தந்தையைத் தாக்கி எச்சரிக்கை விடுத்துச் சென்றுள்ளனர். அவனால் இந்தச் சம்பவத்தை மறக்க முடியவில்லை. இத்தகைய குழந்தைகள் மனதிலிருந்து அச்சத்தை அகற்றவும் அவர்களைத் தனிமையில் இருக்கவிடாமல் பார்த்துக்கொள்ளவும் அடிப்படையாக அவர்களைப் பேச வைத்து சிகிச்சை அளித்து வருகிறோம்” என்றும் கவலையுடன் கூறினார்.

முகாமில் வசிக்கும் சாதத் என்ற 11 வயது சிறுவன், ``இன்று எனக்கு ஆங்கிலத் தேர்வு. ஆனால், என்னால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. நான் தேர்வெழுத படித்து தயாராக இருந்தேன். இப்போது படித்தது எல்லாம் மறந்துவிடுமோ என்று பயமாக உள்ளது. நான் பல நாள்களாக என்னுடைய நண்பர்களையும் சந்திக்கவில்லை” என தனக்கு வழங்கப்பட்ட காகிதத்தில் படம் வரைந்தபடி பேசியுள்ளார்.

டெல்லி கலவரம்
டெல்லி கலவரம்

மற்றொரு மனநல ஆலோசகரான அங்கித் தத் பேசும்போது, ``இங்குள்ள குழந்தைகளுக்கு காலை வேளையில் உடற்பயிற்சி வழங்க முயல்கிறோம். இதனால், கொஞ்சம் உற்சாகமாக அவர்கள் உணர்வார்கள். வழக்கமான நாள்களிலிருந்து கொஞ்சம் விலக முடியும். பல குழந்தைகளுக்கு மனச்சோர்வு அதிகமாக உள்ளது. வன்முறை நடக்கும்போது அவர்கள் பெற்றோர்களுடன் ஓடியதை அடிக்கடி நினைத்துப் பார்க்கிறார்கள். ஒருசில குழந்தைகள் அழுதுகொண்டே இருக்கிறார்கள். பயத்திலிருந்து விடுபட்டு பாதுகாப்பை உணர வேண்டியது அவசியம். அதற்கான முயற்சிகளைத்தான் நாங்கள் செய்து வருகிறோம்” என்றார்.

Credits : Hindustantimes

`மதம் தெரியல; என்  பிள்ளைகளாகவே பார்த்தேன்!’ - டெல்லி வன்முறையில் மக்களைக் காத்த சீக்கியர்கள்
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு